விஜய் டிவி ஷோவில் ரூ.25 லட்சம் வென்ற காளியம்மாள்; இது எப்போ?

Published : Feb 27, 2025, 01:28 PM IST

அரசியல்வாதி காளியம்மாள், விஜய் டிவியில் ஒளிபரப்பான புகழ்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளரக பங்கேற்று அதில் 25 லட்சம் வென்றிருக்கிறார்.

PREV
15
விஜய் டிவி ஷோவில் ரூ.25 லட்சம் வென்ற காளியம்மாள்; இது எப்போ?
Kaliyammal

தமிழ் நாட்டில் தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் பெயர்களில் காளியம்மாளும் ஒருவர். இவர் சீமானின் நாம் தமிழர் கட்சியில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்து வந்தார். அண்மையில் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகிய காளியம்மாள், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளாதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் அமைதிகாத்து வருகிறார் காளியம்மாள்.

25
Politician Kaliyammal

சீமான் மீதிருந்த அதிருப்தியால் தான் காளியம்மாள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. காளியம்மாள் அக்கட்சியில் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டதாகவும், அதை சீமான் கொடுக்க மறுத்ததால் விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. காளியம்மாள் எந்தக் கட்சியில் இணையப்போகிறார் என்பது ஒருபுறம் இருக்க, அவர்குறித்த பழைய வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியது ஏன்.? காளியம்மாள் பரபரப்பு விளக்கம்

35
kaliyammal in vijay tv show

அதன்படி அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் ரூ.25 லட்சம் வென்றிருக்கிறார். அது வேறெதுவுமில்லை... விஜய் டிவியில் 10 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்டு ஹிட் அடித்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் தான் காளியம்மாள் பங்கேற்று இருக்கிறார். அந்நிகழ்ச்சி மூன்று சீசன்களாக நடத்தப்பட்டது. அதன் முதல் சீசனை சூர்யாவும், இரண்டாவது சீசனை பிரகாஷ் ராஜும், மூன்றாவது சீசனை அரவிந்த் சாமியும் தொகுத்து வழங்கினர்.

45
kaliyammal Wins in neengalum vellalam oru kodi Show

இதில் அரவிந்த் சாமி தொகுத்து வழங்கிய மூன்றாவது சீசனில் தான் காளியம்மாள் கலந்துகொண்டார். நாகை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த காளியம்மாள் தன் கணவர் பிரகாசத்துடன் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் 25 லட்சத்துக்கான கேள்வியாக காளியம்மாளிடம், அரச இலையில் சூரியன் இருப்பது போல் வடிவமைக்கப்பட்ட பிளாட்டின பதக்கம் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பாரத ரத்னா என பதிலளித்தார் காளியம்மாள். எப்படி யோசிக்காமல் சொன்னீர்கள் என அரவிந்த் சாமி கேட்டதற்கு, எம்ஜிஆர் பாரத ரத்னா விருது வென்ற ஆண்டு எது என தேடியபோது அவ்விருது எவ்வாறு இருக்கும் என்பதை பார்த்தேன், அதனால் டக்குனு பதில் சொல்லிவிட்டேன் என காளியம்மாள் கூறினார்.

55
Politician kaliyammal Wins 25 Lakhs

ரூ.25 லட்சம் வென்ற பின்னர் 50 லட்சத்திற்கான கேள்விக்கு செல்லாமல் அந்த தொகையோடு வெளியேறுவதாக கூறினார் காளியம்மாள். அந்த சீசனில் அதிக தொகை வென்ற போட்டியாளர் என்கிற சாதனையை காளியம்மாள் படைத்திருந்தார். காளியம்மாளின் குடும்பம் 2004-ம் ஆண்டு வந்த சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது தாங்கள் சந்தித்த கஷ்டங்களை நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் சொல்லி அனைவரையும் கண்கலங்க வைத்திருந்தார் காளியம்மாள். 

இதையும் படியுங்கள்... நாதகவில் இருந்து விலகினார் காளியம்மாள்? வைரலாகும் அழைப்பிதழ்! எந்த கட்சியில் இணைகிறார்?

Read more Photos on
click me!

Recommended Stories