கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை குறித்த உண்மையை வெளியிட்ட மகன் விஜய் யேசுதாஸ்!

Published : Feb 27, 2025, 12:04 PM ISTUpdated : Feb 27, 2025, 12:07 PM IST

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து, இது வதந்தி என்பதை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மற்றும் PRO தரப்பில் இருந்தும் உறுதி செய்துள்ளனர்.  

PREV
14
கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை குறித்த உண்மையை வெளியிட்ட மகன் விஜய் யேசுதாஸ்!
பின்னணி பாடகர் யேசுதாஸ்

கேரள மாநிலத்தை சேர்ந்த, பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ். 85 வயதாகும் இவருக்கு, உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மலையாள மொழியை தாண்டி, 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 50,000-திற்கும் மேற்பட்ட பாடல்களை யேசுதாஸ் பாடியுள்ளார். 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்களை பாடிய பெருமையும் இவருக்கு உண்டு.
 

24
யேசுதாஸ் பாடிய தமிழ் பாடல்கள்:

அதேபோல் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களான, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரகுமான், டி.இமான் போன்ற 30-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். தமிழில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய, ஆராரோ ராரே (ராம்), பூவே பூச்சூடவா (பூவே பூச்சூடவா), கல்யாண தேன்நிலா (மௌனம் சம்மதம்), என் இனிய பொன்நிலாவே (மூடு பனி), வா வா அன்பே (ஈரமான ரோஜாவே), நெஞ்சே நெஞ்சே (ரட்சகன்), தண்ணி தொட்டி (சிந்து பைரவி). போன்ற பாடல்கள் தற்போது வரை அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

K.J. Yesudas Hospitalized: பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி!

34
திடீர் என உடல்நலக் குறைவு?

இந்நிலையில், இன்று காலை இவரை பற்றி வெளியான தகவல், திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, யேசுதாசுக்கு திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை குறித்து தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவலை அவரின் மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார். இது முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளார்.

44
யேசுதாஸ் நலமுடன் உள்ளார்:

அதே போல் PRO தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், "பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் பின்னணி பாடகர் யேசுதாஸ் அவர்கள் உடல் நல மில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாக தமிழகத்தில்  செய்திகள் பரவியது. அதில் உண்மை இல்லை என்றும், அவர் பூரண நலத்துடன் இருக்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று அவரின் உதவியாளர் சேது இயாள் தெரிவித்துள்ளார். ஆகவே அவர் நலமுடன் இருக்கிறார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு அவர் கேட்டு கொள்கிறோம் என கூறி உள்ளனர்.

click me!

Recommended Stories