Case Against Parithabangal Fame Gopi and Sudhakar : பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் சுதாகரின் யூடியூப் சேனல் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி முழுவதுமாக இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
Case Against Parithabangal Fame Gopi and Sudhakar :பிரபல யூடியூபர்களாக உள்ள கோபி, சுதாகர் மற்றும் அவர்களது குழுவினர் பரிதாபங்கள் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த சேனல் மூலமாக சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். யூடியூப் சேனல் மூலமாக பிரபலமான கோபி மற்றும் சுதாகர் இருவரும் இந்த பரிதாபங்கள் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த் நிறுவனத்தின் மூலமாக தற்போது ஓ மை காட் என்ற படத்தையும் தயாரித்து, அதில், நடிக்கவும் செய்துள்ளனர். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் கோபி மற்றும் சுதாகர் இருவரும் இணைந்து நடத்தி வரும் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
23
பரிதாபங்கள் கோபி சுதாகரின் யூடியூப் சேனல் மீது புகார்
அண்மையில் தங்களது யூடியூப் சேனலில் சொசைட்டி பாவங்கள் என்ற டைடிட்லில் சமூகத்தில் நடக்கும் அவல நிலை ஒன்றை வீடியோவாக பதிவிட்டு அதனை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த வீடியோவை சுட்டிக்காட்டி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புகார் அளித்த வழக்கறிஞர் தனுஷ்கோடியின் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: நெல்லையில் இரு குடும்பங்களுக்கு இடையில் நடக்கும் சம்பவங்களை 2 சமூகங்களுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக அவர்கள் சமூகத்தை சீர்குலைக்கும் விதமாகவும், இரு சமூகங்களை இழுவு படுத்தும் விதமாகவும் சுட்டிக்காட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
33
பரிதாபங்கள் யூடியூப் சேனல் மிது புகார்
ஆகையால் அவர்கள் பதிவிட்ட அந்த வீடியோவை உடனடியாக பரிதாபங்கள் சேனலிலிருந்து நீக்க வேண்டும் என்றும் இனிமேல் இது போன்ற வீடியோக்களை வெளியிட தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகார் அளிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக பல்வேறு சம்பவங்களில் அவர்களது யூடியூப் சேனல் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதறகு முன்னதாக விவசாயிகளை இழிவுபடுத்தியதாக கூறி யூடியூப் சேனல் மீது புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.