விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யார் என்ற ரியாலிட்டி ஷோவின் மூலமாக பிரபலமான பாலா, அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கிடைத்த தனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக ஏராளமான உதவிகளை செய்து வந்தார். பொதுவாக தனக்கு போகத்தான் தானமும் தர்மமும் என்பார்கள், ஆனால், பாலா அதற்கு எதிராக தனக்கு கிடைப்பதையெல்லாம் மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
ஆம்புலன்ஸ், ஆட்டோ, தையல் மிஷின் என்று உணவு, உடை, மருத்துவ செலவுகள், கல்வி உதவிகள் என்ரு எத்தனையோ பேருக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக சிறியதாக ஆரம்பித்த பணி இன்று எத்தனையோ பேர காப்பாற்றி இருக்கிறார். மேலும், ஏழை மாணவர்களை படிக்க வைத்து வருகிறார்.