கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் சாதித்த நடிகைகள் ஏராளம். அந்த லிஸ்டில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக இருப்பவர் அசின். இவர் கடந்த 2004-ம் ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான எம்.குமரன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.
தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார் அசின். இவ்வாறு அறிமுகமான சில ஆண்டுகளிலேயே அசுர வளர்ச்சி கண்ட அசின், டாப் நடிகையாக இருக்கும் போதே திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் கம்பெனியின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார்.