Jai Bhim: இப்போ என்ன செய்ய போகிறார் பாமக பாலு..! கோல்டன் குளோப் பட்டியலில் இடம் பிடித்த 'ஜெய் பீம்'!

First Published Dec 1, 2021, 6:49 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான 'ஜெய் பீம்' படத்திற்கு எந்த ஒரு மத்திய - மாநில விருதுகளுக்கு பரிசீலிக்க கூடாது என, பாமக வரிந்து கட்டி நிற்கும் நிலையில், தற்போது 'ஜெய் பீம்' படம் கோல்டன் குளோப் விருது பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கும் படங்கள் பெரும்பாலும் சர்ச்சையில் சிக்குவது என்பது வழக்கமாகி விட்டது. அந்த வகையில், சூர்யா நடித்து அவரது 2 டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தீபாவளியை முன்னிட்டு, ஓடிடி தளத்தில் வெளியான 'ஜெய்பீம்' படத்துக்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும், அதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தற்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

குறிப்பாக இதில் வில்லனாக வரும் போலீஸ் அதிகாரி, மேல் சாதியினர் போல காட்டப்பட்டிருந்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட வசனங்களும் பட்டியல் இனத்தவரை மிக மோசமாக விமசரிப்பதாகவே இருந்தது. அதோடு அந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த கட்சியின் கொடிகளும் போஸ்டர்களும் ஆங்காங்கே காட்டப்பட்டிருந்தது. போலீஸ் அதிகாரிக்கு இந்த படத்தில் வைத்திருந்த பெயர் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்ததால் தற்போது வரை இந்த சர்ச்சை முடிவில்லாமல் நீண்டு கொண்டே உள்ளது.

உண்மை நிகழ்வுகளை படமாக்கும் போது உண்மையான சித்தரிப்புகளையே சொல்ல வேண்டும் என்கிற பட்சத்தில்... சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்தில் குறவர் சமூகத்தை இருளர் சமூகம் என கூறியுள்ளதும், படமாக எடுக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கூறாமல் படமாகியதாக நிஜ செங்கேணியான 'பார்வதி அம்மாள்' கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எது, எப்படி இருந்தாலும் தொடர்ந்து நல்ல விமர்சனங்களும், பலரது பாராட்டுக்களும் இந்த படத்திற்கு கிடைத்ததால், இப்படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவே கூறப்பட்டது.

ஆனால் அதற்க்கு ஆப்பு வைப்பது போல வன்னியர் சங்கம் சார்பில்  மேல் முறையீடு மனு ஒன்று தொடரப்பட்டது. அதில் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதால் 'ஜெய் பீம்' படத்தை  எந்த விதமான விருதிற்கோ அங்கீகாரத்திற்கோ,  மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை செயலர், தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலர் ஆகியோருக்கு  வன்னியர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு இந்த மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு சரியாக 20 நாட்களே ஆகும் நிலையில், பாமகவினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது தற்போது 'ஜெய் பீம்' படம் வெளிநாட்டு பட பிரிவின் பட்டியலில் கோல்டன் குளோப் பட்டியலில் இணைந்துள்ளது.

சினிமா உலகில் உயர்ந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள விருது என்றால் அது  கோல்டன் குளோப் விருது தான். இந்த விருதை பெரும் பெரும்பாலான படங்கள் ஆஸ்கர் விருதை பெறும் என்பார்கள்.

2022ம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா ஜனவரி 9 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் வெளிநாட்டு படப்பிரிவின் பட்டியலில் ஜெய்பீம் இடம் பிடித்துள்ளது. இந்த தகவலை சூர்யாவின் 2டி நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியான ராஜசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மத்திய - மாநில அரசுகள் வழங்கும் விருதுகளுக்கு தடை போட கூறிய பாமகவினர், குறிப்பாக பாபு தற்போது தற்போது கோல்டன் குளோப் பட்டியலில் இப்படம் இடம்பிடித்துள்ளதால், அடுத்து என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

click me!