தல சமீப காலமாகவே தொடர்ந்து தன்னுடைய படங்களில் படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.
ஆனால் பல ஆண்டுகளுக்கு பின் அஜித், 'வலிமை' படத்தில் ரசிகர்களை கவரும் விதமாக செம்ம ஸ்டைலிஷான யங் லுக்கில் நடித்துள்ளார்.
அதே போல் இந்த படத்தில் தன்னுடைய ரேஸிங் திறமையை வெளிப்படுத்தும் விதமாக, பைக் ஸ்டண்ட் மற்றும் ரேஸிங் காட்சிகளில் தூள் கிளப்பியுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் பைக் ஸ்டண்ட் BTS காட்சிகள் வெளியாகி, வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது மட்டும் இன்றி, வியக்க வைத்தது.
இந்நிலையில், தற்போது 'வலிமை' படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதாலும், ரேஸிங் காட்சிகளில் நடித்ததை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் அஜித், இயக்குனர் வினோத்துடன் தன்னுடைய வீட்டிலேயே படத்தை பார்த்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
படம் எதிர்பார்த்ததை விட செம்ம கலக்கலாக வந்ததால், வினோத்தை கட்டி பிடித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்த அஜித் அவருக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.
அதே போல் அடுத்த படத்தை வேறு இயக்குனருடன் பணிபுரிந்து விட்டு அதன் பின்னர் வினோத் உடன் பணி புரியலாம் என்று முதலில் திட்டமிட்டு இருந்தவர், தற்போது உடனடியாக வினோத் இயக்கத்தில் அடுத்த படத்தையும் நடிக்க முடிவு செய்துவிட்டாராம்.
படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் நிறைவடைந்து விட்டதால்... விரைவில் செகண்ட் சிங்கிள் வெளியிட்ட சில தினங்களில் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் ரசிகர்களும் இதற்காக வெறித்தனமாக கார்த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.