அனிருத் - காவ்யா திருமண வரவேற்பிற்கு ஆப்சென்ட் ஆனாலும் லெட்டர் மூலம் மனதார வாழ்த்திய பிரதமர் மோடி

Published : Nov 21, 2026, 06:19 PM IST

PM Modi Wishes Anirudh - Kavya Maran : அனிருத் - காவ்யா மாறன் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற உள்ள நிலையில், அவர்களை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

PREV
14
PM Modi Wishes Anirudh - Kavya Maran

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். இவர் இசையமைக்கும் பாடல்களும், பின்னணி இசையும் இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கும், அனிருத்துக்கும் கடந்த நவம்பர் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.

24
சென்னையில் இன்று பிரம்மாண்ட திருமண வரவேற்பு!

திருமணத்தைத் தொடர்ந்து அனிருத் – காவ்யா மாறன் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (நவம்பர் 21) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் இந்தியத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, காவ்யா மாறனுக்குச் சொந்தமான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

34
அனிருத் – காவ்யா தம்பதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இதற்கிடையே, இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள முடியாத பிரதமர் மோடி, கடிதம் வாயிலாக புதுமணத் தம்பதிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோருக்கு பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அனிருத் மற்றும் காவ்யா இருவரும் தங்களது வாழ்க்கையின் புதிய பயணத்தை நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் தொடங்க மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தம்பதியினர் தங்களுக்குள் அன்பும் பாசமும் நாளுக்கு நாள் அதிகரித்து, நீண்ட காலம் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார். குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

44
திருமண வரவேற்பு அழைப்புக்கு நன்றி தெரிவித்த மோடி!

தொடர்ந்து, நவம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தன்னை அழைத்ததற்காக கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறனுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இந்த இனிய தருணத்தில் புதுமணத் தம்பதிக்கு மீண்டும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 5-ம் தேதி எழுதப்பட்ட பிரதமர் மோடியின் இந்த வாழ்த்துக் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அனிருத் – காவ்யா மாறன் திருமணத்திற்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள செய்தி தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories