OM Movie : ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள ஓம் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. அப்படத்தின் நெகடிவ் என்ன என்பதை பார்க்கலாம்.
‘அமரன்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தனது அடுத்த படைப்பாக ‘ஓம்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா என பல மொழிகளைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்திருப்பதால், அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக, மம்மூட்டி இதுவரை ஏற்றிராத ஒரு மாறுபட்ட, அதிகாரம் நிறைந்த கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்தன.
ஆனால், திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களின் கருத்துகள் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக அமைந்துள்ளன. படத்தின் திரைக்கதை, கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் மற்றும் காட்சிகளின் வலிமை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘பத்து தல’ திரைப்படத்துடன் ‘ஓம்’ படத்தை ஒப்பிட்டு, அந்தப் படமே இதைவிட சுவாரஸ்யமாக இருந்ததாக விமர்சித்து வருகின்றனர்.
24
மம்மூட்டியின் கதாபாத்திரம் ஏன் ஏமாற்றமளித்தது?
இப்படத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக மம்மூட்டியின் கதாபாத்திரம் மாறியுள்ளது. தனுஷ் அண்டர்கவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக நிற்கும் வலிமையான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் மம்மூட்டி மிரட்டுவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. குறிப்பாக, தனுஷின் உண்மையான அடையாளத்தை ஆரம்பத்திலேயே சந்தேகித்து, தனது புத்திசாலித்தனத்தால் அவரை எதிர்கொள்ளும் வகையில் மம்மூட்டியின் கதாபாத்திரம் அமைந்திருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால், படத்தின் முக்கியமான திருப்பங்களில்கூட மம்மூட்டியின் கதாபாத்திரம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது ரசிகர்களின் விமர்சனமாக உள்ளது. கதையில் சந்தேகப்பட வேண்டிய பல சூழல்கள் இருந்தும், தனுஷை முழுமையாக நம்பும் விதத்தில் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
34
ஜெயிலர் 2 மூர்த்தி அண்ணன் என மீம்ஸ் போடும் நெட்டிசன்கள்!
மம்மூட்டியின் கதாபாத்திரம் குறித்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் நெட்டிசன்கள் அவரை வைத்து விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக, ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் இடம்பெறும் பழக்கடை மூர்த்தி அண்ணன் கதாபாத்திரத்துடன் மம்மூட்டியை ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகின்றனர். அந்தக் கதாபாத்திரத்தின் அருகில் இருக்கும் அடியாள்தான் தனுஷ் என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டு வருகின்றனர்.
அதேபோல், தனுஷ் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும் காட்சியிலும் மம்மூட்டியின் எதிர்வினை ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் இடம்பெறும் பின்னணி இசையும் தற்போது மீம்ஸ்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ‘மெய்யழகன்’ படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தைப் போல, தனக்கு விருப்பமில்லாத சில விஷயங்களைச் செய்யும் ஒரு சாதாரண மனிதராகவே மம்மூட்டியின் கதாபாத்திரம் தெரிகிறது என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.
இத்தனை விமர்சனங்களுக்கு மத்தியிலும் சாய் பல்லவியின் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. குறிப்பாக, படத்தின் சண்டைக் காட்சிகளில் அவர் வெளிப்படுத்திய வேகம் மற்றும் ஆக்ஷன் திறமை பலரையும் கவர்ந்துள்ளது. புரூஸ் லீ பாணியில் சாய் பல்லவி சண்டையிடும் காட்சிகள் படத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால், படத்தில் உண்மையான ஹீரோயின் சாய் பல்லவிதான் என்றும் சிலர் புகழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போதே தனது கதாபாத்திரம் குறித்த சில விஷயங்களை மம்மூட்டி பகிர்ந்திருந்தார். தற்போது படம் வெளியான பிறகு அவரது பேச்சை ரசிகர்கள் மீண்டும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக, தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி என திறமையான நடிகர்கள் பலரும் ஒன்றிணைந்திருந்தாலும், ‘ஓம்’ திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிலான திரையரங்க அனுபவத்தை வழங்கவில்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, மம்மூட்டி போன்ற அனுபவம் வாய்ந்த நடிகருக்கு இன்னும் வலுவான கதாபாத்திரத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கலாம் என்பதே ரசிகர்களின் முக்கிய ஆதங்கமாக உள்ளது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.