O.M Box Office: பாக்ஸ் ஆபிஸில் தனுஷ் ருத்ர தாண்டவம்; முதல் நாளில் 'ஓ.ம்' திரைப்படம் இத்தனை கோடி வசூலா?

Published : Nov 21, 2026, 07:38 AM IST

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'ஓ.ம்' (Operation Mole) திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.31.55 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்களை பார்ப்போம்.

PREV
14
உலக அளவில் ரூ.30 கோடியைத் தாண்டி 'ஓ.ம்'

தமிழ்நாட்டில் குறைவான திரையரங்குகளே ஒதுக்கப்பட்ட நிலையிலும், தனுஷ் நடிப்பில் வெளியான 'ஓ.ம்' (Operation Mole) திரைப்படம் முதல் நாளிலேயே இரட்டை இலக்க (Double Digit) வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸிலும் தனுஷுக்கு மிகப்பெரிய ஓபனிங்கை இப்படம் கொடுத்துள்ளது.

24
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான தனுஷின் ஓ.ம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் 20-ம் தேதி 'ஓ.ம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சி முடிந்த உடனேயே படத்திற்கு எதிர்மறையான (Negative) & கலவையான விமர்சனங்கள் குவியத் தொடங்கின. படம் 'ஆவரேஜ்' என்றும் 'அபவ் ஆவரேஜ்' என்றும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், அந்த விமர்சனங்களையும் கடந்து மாலை மற்றும் இரவு நேரக் காட்சிகளைக் காண தனுஷ் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு முண்டியடித்ததால், முதல் நாள் வசூல் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

34
முதல் நாள் வசூல் நிலவரம்

'அமரன்' திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி மீது ரசிகர்கள் வைத்திருந்த அபாரமான நம்பிக்கையின் காரணமாக, 'ஓ.ம்' படத்திற்கு முன்பதிவிலேயே (Advance Booking) ரூ.15 கோடிக்கு மேல் வசூல் வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், முதல் நாளில் உலகளவில் 'ஓ.ம்' திரைப்படம் அதிகபட்சமாக ரூ.31.55 கோடி வசூலை ஈட்டியுள்ளது. மொழிவாரியான மற்றும் வெளிநாட்டு வசூல் விவரங்கள் பின்வருமாறு;

தமிழ்: ரூ.13.35 கோடி

தெலுங்கு: ரூ.4 கோடி

இந்தி: ரூ.35 லட்சம்

வெளிநாடு (Overseas): ரூ.11 கோடி

(குறிப்பு: மற்றொரு வர்த்தகத் தகவலின்படி, உள்நாட்டில் ரூ.20.70 கோடியும், வெளிநாடுகளில் ரூ.9.90 கோடியும் என மொத்தம் ரூ.30.60 கோடி வசூலாகியுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது).

44
3 நாட்களில் ரூ.100 கோடி வசூலைத் தொடுமா?

இதே வேகத்தில் 'ஓ.ம்' திரைப்படம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓடினால், வெளியான முதல் 3 நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலைத் தொட்டுவிடும் எனத் திரையுலக வட்டாரங்கள் கணித்துள்ளன. தமிழ்நாட்டில் தனுஷ் நடித்த திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், முதல் 3 நாட்களில் ரூ.100 கோடி வசூலைக் கடந்தால் தனுஷுக்கு இது மிகச்சிறந்த 'கம்பேக்' (Comeback) படமாக அமையும். மேலும், முதல் நாளில் இப்படத்தை வெளியிடாத ரோகிணி உள்ளிட்ட சில பிரபல திரையரங்குகளில் நிலவி வந்த வெளியீட்டுச் சிக்கல்கள் (டீல் பஞ்சாயத்து) முடிவுக்கு வந்துள்ளதால், இன்று முதல் 'ஓ.ம்' படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories