நெல்சன் இயக்கத்தில் இன்று வெளியாகி கெத்து காட்டி வருகிறது பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
27
beast
இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இதற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்றது.
37
beast
சன் பிக்சர்ஸ் பிரமாண்ட செலவில் தயாரித்துள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி கலவையாக விமர்சங்களை பெற்று வருகிறது. கதை எப்படி இருந்தா என்னங்க..எங்க தளபதி என்று ரசிகர்கள் மாஸ் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
47
beast
படம் வெளியான முதல் நாளில் 38 முதல் 40 கோடியை வசூலித்து வலிமையை பின்னுக்கு தள்ளும் என்ற பேச்சும் அடிபடத்தான் செய்கிறது. அதோடு ப்ரீ ரிலீஸ் மூலம் இதுவரை ரூ. 230 கோடிக்கு மேல் கல்லா கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
57
beast
இதற்கிடையே தங்கள் பாணியில் பீஸ்டை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். அந்த வகையில் திருப்பூரில் செயல்படும் கம்பெனியில் தொழிலார்களுக்கு பீஸ்ட் டிக்கெட் வழங்கி ஒருநாள் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டது.
67
beast
அதோடு அம்பாசமுத்திரம் விஜய் ரசிகர்கள் பரோட்டா கண்டஸ்ட்டை அறிவித்தனர். அதாவது பீஸ்ட் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வரும் ரசிகர்களுக்கு இலவசமாக கொத்து புரோட்டோ வழங்கப்படும் என்று மாஸ் காட்டினார்.
77
beast
அதேபோல விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆருக்கு சொந்தமான ராஜலட்சுமி தியேட்டர் மற்றும் அமிர்தராஜ் தியேட்டரில் பீஸ்ட் படத்தின் FDFS காட்சியான காலை 7 மணி காட்சிக்கு 5 டிக்கெட் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.