விஜய் தனக்கே உரிய மாஸ் நடிப்பின் மூலம் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளதாக பெரும்பாலான ட்விட்டர் முதல் பாதி விமர்சனங்கள் கூறுகின்றன. ஆனால் அந்த விமர்சனங்களில் பெரும்பாலும் அவரது தீவிர ரசிகர்கள் பதிவிட்ட விமர்சனங்களாகவே உள்ளன. #BeastFDFS #VeeraRaghavan ஆகிய ஹேஷ்டேக்குகளை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையான சில சினிமா விமர்சகர்களும் படத்திற்கு நல்ல விமர்னத்தை தந்து வருகின்றனர். விஜய் தனது நடிப்பால் முதல் பாதி முழுவதையும் விறுவிறுப்பாக்கியுள்ளதாகவும், இரண்டாவது பாதிக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஒரு ஷாப்பிங் மால் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும்போது பிணையக் கைதிகளாகும் பொதுமக்களை காப்பாற்றும் காவல்படை வீரனின் ஆக்ஷன் அதகளமே பீஸ்ட் என்கிறார்கள். Invasion Thriller என்று அழைக்கப்படும் இந்த வகை படங்கள் ஹாலிவுட்டில் நிறைய உண்டு. இது போன்ற படங்களில் காமெடி வசனங்களை சேர்த்து ரசிக்க வைப்பது கடினமான காரியம் என்றும், அதை இயக்குநர் நெல்சன் தனக்கே உரிய ஸ்டைலில் செய்கிறார் என்றும் கூறுகின்றனர் சில ரசிகர்கள்.
ஆனால் அதிகம் எதிர்பார்த்து படத்துக்கு முதல் நாள் முதல் காட்சிக்குப் போன சில ரசிகர்களோ, தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகவே பதிவிடுகின்றனர். குறிப்பாக படத்தின் முதல் பாதியில் கதையே இல்லை என்றும், நெல்சனின் காமெடி மட்டுமே உள்ளது என்றும் கூறுகின்றனர். ஆக படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன.
படத்தை வெற்றி பெற வைக்க சோசியல் மீடியாக்களில் விஜய் ரசிகர்கள் தீயாக வேலை செய்து வரும் வேளையில், சில மோசமான விமர்சனங்களும் பதிவிடப்படுகின்றன. அதாவது போரடிக்கும் வழக்கமான ‘கிரிஞ்ச்’ காமெடியே படத்தில் இருப்பதாகவும், இயக்குநர் நெல்சன் சொதப்பிவிட்டதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். புலி, போக்கிரி, சுறா, பைரவா, மாஸ்டர் ஆகிய படங்களின் கலவை தான் பீஸ்ட். இதில் புதிதாக ஒன்றும் இல்லை. போரடிக்கும் வழக்கமான வசனங்கள், திணிக்கப்பட்ட காமெடி, தேறாத கிராபிக்ஸ், இழுவையான காட்சிகள் என்று பீஸ்ட் இருப்பதாக ஒருவர் பதிவிட்டுள்ளார்.
விஜய் ரசிகர்கள் vs விஜயை பிடிக்காதவர்கள் என்று ட்விட்டர் தளம் பரபரப்பாக இருக்கும் போது, இந்த கோஷ்டிகளில் சேராத சிலரும் விமர்சனம் பதிவிடுகின்றனர். ஆனால் அதிலும் சிலர் படம் சுமார் தான், இரண்டாவது பாதிக்காக காத்திருப்போம் என்கின்றனர்.
விஜயின் தீவிர ரசிகர்கள் சிலர் இயக்குநர் நெல்சனை வறுத்தெடுத்து வருகின்றனர். விஜய் தமிழ் சினிமா தாண்டி, தென்னிந்திய சினிமாவிலும் ஒரு மாஸ் ஹீரோ என்பதில் மாற்று கருத்தே இல்லை. அப்படிப்பட்டவரை பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயனைப் போல ஆக்கிட்டீங்களே என்று ஆதங்கப்படுகின்றனர் ரசிகர்கள். சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கிய டாக்டர் படம் பெரும் வெற்றி பெற்றது என்றாலும், சிவாவை விட விஜய் பெரிய மாஸ் ஸ்டார். அவருக்கென்று மாஸான காட்சிகள் இல்லாமல் வழக்கமான கிரிஞ்ச் ஸ்லோ மோஷன் காட்சிகள், வசனங்கள் என்றி சிவகார்த்திகேயன் ஆக்கிட்டீங்களே நெல்சன் என்று சீறுகின்றனர் விஜய்யின் தீவிர ரசிகர்கள்