நாளை வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் பீஸ்ட்.
27
beast
பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் செல்வராகவன், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, அபர்ணா தாஸ், ஷான் டாம் சாக்கோ என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.
37
beast
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் ஏப்ரல் 13-ந் தேதி ரிலீசாக உள்ளது.
47
beast
முன்பதிவுகளும், ப்ரோமோஷனும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை பெரும்பாலான திரையடங்குகளில் அடுத்த 5 நாட்களுக்கு கட்டாயம் பீஸ்ட் தான் அதிலும் சில திரையரங்குகள் 24 மணி நேரமும் இந்த படத்தை மட்டுமே திரையிட முடிவு செய்துள்ளனர்.
57
beast
அதே வேளையில் மற்ற மாநிலங்களை பொறுத்தவரை பீஸ்ட் பின் தங்கியுள்ளது. யாஷ் சூப்பர் ஸ்டாராக இருக்கும் கர்நாடக மாநிலத்தில் மிகக்குறைந்த திரையரங்குகளில் மட்டுமே பீஸ்ட் திரையிடப்படவுள்ளதாக ரசிகர் ஒருவர் வருத்தம் தெரிவித்துள்ளார். அதோடு இரு திரையரங்குகளில் இருந்து நாட்கள் மட்டுமே பீஸ்ட் திரையிடப்பட்டு பின்னர் kgf 2போடப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
67
beast
இது ஒருபக்கம் இருக்க விஜய்க்கு தமிழகத்தை அடுத்து நல்ல வரவேற்பு உள்ள ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்தபட்டுள்ளது..
77
kgf 2
. ஏற்கனவே kgf 2 விற்கு கணிசமான டிக்கெட் விலையை ஏற்றிக்கொள்ள தெலுங்கானா அரசு அனுமதி கொடுத்திருந்தது. ஆனால் பீஸ்ட் டிக்கெட் மேலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதாம். இது kgf 2 விற்கு சாதகமாக அமையலாம் என கணிக்கப்படுகிறது.