கார்த்தியுடன் மோதும் சிவகார்த்திகேயன்...யார் வெல்லப்போவது?

Kanmani P   | Asianet News
Published : Apr 12, 2022, 03:21 PM IST

கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் 20 வது படம் இரண்டும் வரும் ஆகஸ்ட் மாதம் நேருக்கு நேர் மோதவுள்ளதாக தகவல் சொல்கிறது.

PREV
18
கார்த்தியுடன் மோதும் சிவகார்த்திகேயன்...யார் வெல்லப்போவது?
SARDAR

முத்தையா இயக்கிய விருமன் படத்தையடுத்து தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில்  சர்தார் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. 

28
SARDAR

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்தாண்டு முடிவடைந்த நிலையில் நீண்ட இடை வெளிக்கு பிறகு தற்போது  தான் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது.

38
SARDAR

கார்த்தி போலீசாக நடிக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா, மலையாள நடிகை ரஜிஷா விஜயன், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பை விரைவில் முடித்து வரும் ஆகஸ்ட் 12-ல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனராம்.

48
SARDAR

சர்தார் படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய ,  ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் ஓடிடி உரிமை ஏற்கனவே விற்று விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

58
SK20

‘டாக்டர்’ படம் வெற்றியை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் தனது 20 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்குகிறார்.

68
SK20

இப்படம் மூலம் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன். SK 20 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு  சமீபத்தில்  பூஜையுடன் தொடங்கியது.

78
SK20

இப்படத்தில் நாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரபோஷப்கா நடிக்கிறார் அதோடு இதில் சத்தியராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

88
SK 20

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளாராம். அதோடு இந்த படம் கார்த்தியின் சர்தாருக்கு போட்டியாக ஆகஸ்ட் 12-ல் வெளியலாம் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories