பட்டியல் இனத்தவர் குறித்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகை மீரா மிதுன், தனது உடல்நிலையை காரணம் காட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகையும், மாடல் அழகியுமான மீரா மீதுன். இந்நிலையில் பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து வன்னி அரசு உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் மீரா மிதுன் புகார் அளித்தனர். பின்னர் மீரா மிதுனுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஜாமீனில் வெளியில் வர முடியாத 7 பிரிவுகளின் கீழ் கடந்த 2021ம் ஆண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
24
மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜர்
மீரா மிதுன், விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். சமீபத்தில் சென்னை திரும்பிய மீரா மிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
34
மீரா மிதுன் சென்னை உயர் நீதிமன்றம் மனுத்தாக்கல்
இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மீரா மிதுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தினமும் 20 மாத்திரைகள் எடுத்து வருவதால் தமது உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைப்பாடும் அதிகளவில் உள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
தற்போதைய சூழலில் விசாரணையை எதிர் கொள்ள முடியாத நிலையில் உள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை ரத்து செய்யக்கோரி விசாரணை நீதிமன்றத்தில் தான் மனுத்தாக்கல் செய்ய முடியும் என கூறி மீரா மிதுனுன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.