பிரபல தெலுங்கு நடிகரும் மகேஷ்பாபுவின் சகோதரருமான நரேஷ் பாபு, நடிகை பவித்ரா லோகேஷை நான்காவது திருமணம் செய்து கொண்ட நிலையில், ஏன் பவித்ரா லோகேஷ் நான்காவது மனைவியாக மாறினார் என்பது குறித்து, அவரின் முன்னாள் கணவர் கூறியுள்ள தகவல்கள் கட்சியை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
இந்நிலையில் இவர் சுரேந்தர் பிரசாத் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார். கணவருடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த, நிலையில்... திடீர் என கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும், பவித்ரா லோகேஷ் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற காரணம், நரேஷ் பாபு உடனான காதல் தான் என கூறப்பட்டது.
நரேஷ் பாபுவின் குடும்ப வழக்கப்படி மிகவும் எளிமையான முறையில் நடந்த இவர்களின் திருமணத்தை தொடர்ந்து, இருவரும் துபாயில் தங்களின் ஹனி மூனை கொண்டாடினர். இது குறித்த சில விடீயோக்களும் வெளியாகி வைரலானது.
Image: Naresh Twitter
இந்நிலையில் பவித்ராவின் முதல் கணவர் சுரேந்திர பிரசாத், தன்னுடைய மனைவி நரேஷ் பாபுவின் 1500 கோடி ரூபாய் சொத்தை அபகரிப்பதற்காக, திட்டமிட்டு தான் அவரை, தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி திருமணம் என்கிற நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக கூறியுள்ளார். நான் சொல்வது நரேஷ் பாபுவுக்கு இப்போது புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், ஒரு நாள் கண்டிப்பாக தெரியவரும் பணத்துக்காக தான் பவித்ரா தன்னை விவாகரத்து செய்துவிட்டு நரேஷ் பாபுவை திருமணம் செய்துள்ளதாக அவரின் முதல் கணவரை கூறிய உள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைகூடாத காதல்... கமுக்கமாக கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அஞ்சலி! மாப்பிள்ளை குறித்து கசிந்த தகவல்!