உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கண்ணை நம்பாதே. அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தை இயக்கிய மு.மாறன் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி உள்ள இதில் உதயநிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் பிரசன்னா, ஸ்ரீகாந்த், சதீஷ், சுபிக்ஷா, பூமிகா, பழ கருப்பையா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
அதன்படி இப்படத்தில் இடம்பெறும் காமெடி காட்சியில், 75 நாளா அம்மா இருக்காங்கனு சொல்லி தான நம்ம எல்லாரையுமே ஏமாத்துனாங்க என சதீஷ் பேசி இருப்பார். உதயநிதி படம் என்பதால் இந்த காட்சியை வேண்டுமென்றே வைத்துள்ளார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், இந்த சர்ச்சை காட்சி குறித்து கண்ணை நம்பாதே படத்தின் இயக்குனர் மு.மாறன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது : இந்தக் காட்சி ஸ்பாட்டில் பண்ணியது தான். இது வெறும் நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட ஒரு காட்சி தான். மற்றபடி எந்தவித உள்நோக்கத்துடனும் இந்த காட்சி எடுக்கப்படவில்லை. உதயநிதி படமாக இருந்தாலும் இதில் எந்தவித அரசியலும் இருக்காது. இது ஒரு கிரைம் திரில்லர் படமாக இருப்பதால் காமெடிக்காக மட்டுமே அந்த காட்சியை வைத்தோம். இந்த காட்சி யாரது மனதையும் புண்படுத்தும் வகையில் இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என மு.மாறன் விளக்கம் கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... படம் பிளாப்... சம்பளம் கொடுக்க பணமின்றி தவித்த தயாரிப்பாளர்... ‘உன் வீட்டைக் கொடு’னு எழுதி வாங்கிய விஜயகாந்த்