நடிகர் சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ், அவர் நடிக்கும் படங்களுக்காக தீயாக புரமோஷன் செய்து வருகிறார். அந்த வகையில் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு படத்திற்காக இவர் செய்த புரமோஷன், படத்திற்கு பெரியளவில் உதவியது. இந்நிலையில், தற்போது அதே பாணியில் சிம்பு நடித்துள்ள புதிய படமான பத்து தல வெற்றிபெற வேண்டி விதவிதமாக புரமோஷன் செய்து வருகிறார் கூல் சுரேஷ்.
அந்தவகையில், நடிகர் சிலம்பரசன் நடிப்பில் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் பத்துதல திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என வேண்டி உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 108 தேங்காய் உடைத்து நடிகர் கூல் சுரேஷ் சிறப்பு வழிபாடு நடத்தி உள்ளார். தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் கூல் சுரேஷ் செல்பி எடுத்துக்கொண்டார்.
இதையும் படியுங்கள்... ஜாலியாக ஹோலி கொண்டாடிய சினிமா நட்சத்திரங்கள்... இணையத்தை கலக்கும் கலர்ஃபுல் போட்டோஸ் இதோ
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கூல் சுரேஷ், “பத்து தல திரைப்படம் வெற்றி பெற வேண்டி மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினோம். திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும், STR இன் பத்துதல..! சிம்பு ரசிகர்கள் கெத்து தல..! என்று அவர் சொன்னதும் அங்கிருந்த சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.