பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தமிழிலும் மணிரத்னம் இயக்கிய குரு, எச்.வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்படத்தில் நடிகர் அஜித்தின் மனைவியாக நடித்து அசத்தி இருந்தார் வித்யா பாலன்.
இதையடுத்து பாலிவுட்டில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த 2011-ம் ஆண்டு டர்ட்டி பிக்சர் என்கிற படத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்து அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்தார் வித்யா. இப்படம் மறைந்த தமிழ் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.
இதையும் படியுங்கள்... திரையுலகில் அதிர்ச்சி.! பிரபல நடிகர் பட்டியல் சேகர் உடல்நல குறைவால் மரணம்!
இப்படத்தில் சில்க் ஆக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார் வித்யா பாலன். இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. நடிகை வித்யா பாலனுக்கு கடந்த 2012-ம் ஆண்டே திருமணம் ஆகிவிட்டது. தொழிலதிபர் ஒருவரை மணந்த வித்யா, திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது 44 வயதாகும் வித்யாபாலன், நிர்வணமாக போட்டோஷூட் நடத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளார். உடலில் ஆடை எதுவும் அணியாமல் பேப்பரால் மட்டும் உடலை மறைத்தபடி நடிகை வித்யா பாலன் நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.
44 வயதில் இப்படி ஒரு போட்டோஷூட்டா என நெட்டிசன்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். வித்யா பாலனை இவ்வாறு போட்டோஷூட் நடத்தியது, டப்பூ ரட்னானி என்கிற புகைப்படக் கலைஞர் தான். இவர் இதற்கு முன் பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி, பரினிதி சோப்ரா, சன்னி லியோன் ஆகியோரையும் இவ்வாறு நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் கரு.பழனியப்பன்... காரணம் இதுதானாம்!!