சிம்பு வீட்டுக்கு வந்த புது வாரிசு... மீண்டும் தாத்தா ஆன குஷியில் டி.ராஜேந்தர்

First Published | Jan 24, 2023, 8:40 AM IST

நடிகர் சிலம்பரசனின் வீட்டுக்கு புது வாரிசு வந்துள்ளதால் அவரது குடும்பத்தினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். குறிப்பாக டி ராஜேந்தர் செம்ம குஷியில் உள்ளாராம்.

நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக விளங்கியவர் டி.ராஜேந்தர். அவரைப் போலவே அவரது மகன் சிம்புவும் தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்த அவர், தற்போது பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பத்து தல படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற மார்ச் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. பத்து தல படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இதில் கேங்ஸ்டராக நடித்துள்ளார் சிம்பு.

இதையும் படியுங்கள்... 22 ஆண்டுகளுக்கு முன்பே அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வந்த சூப்பர் வாய்ப்பை நழுவவிட்டேன் - துணிவு நடிகை வருத்தம்

Tap to resize

சிம்புவுக்கு குரலரசன் என்கிற தம்பியும், இலக்கியா என்கிற தங்கையும் உள்ளனர். இவர்கள் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. இதில் சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு திருமணமாகி ஜேசன் அபி என்கிற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், தற்போது சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்த தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன்படி தனக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். வீட்டுக்கு புதிதாக வாரிசு வந்துள்ளதால் சிம்புவும், அவரது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்களாம். மீண்டும் தாய்மாமா ஆன சிம்புவுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்..! கணவர் அட்லீயுடன் உள்ள புகைப்படங்களை பகிர்ந்த பிரியா..!

Latest Videos

click me!