நடிகரும், இயக்குனருமான ஈ ராமதாஸ் மாரடைப்பால் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

First Published | Jan 24, 2023, 7:26 AM IST

நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கிய ஈ ராமதாஸ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66.

தமிழ் சினிமாவில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஈ ராமதாஸ் காலமானார். அவருக்கு வயது 66. விழுப்புரத்தை சேர்ந்தவரான ராமதாஸ், சினிமா மீதுள்ள ஆசையில் சென்னைக்கு வந்தவர். ஆரம்ப காலகட்டத்தில் எழுத்தாளராக தனது பயணத்தை தொடங்கிய இவர், பின்னர் இயக்குனராக களமிறங்கினார்.

இவரது இயக்கத்தில் ராஜா ராஜா தான், சுயம்வரம், இராவணன், ஆயிரம் பூக்கள் மலரட்டும், வாழ்க ஜனநாயகம், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு போன்ற படங்கள் வெளியாகின. அதேபோல் எழுத்தாளராகவும் ஏராளமான படங்களில் பணியாற்றி இருக்கிறார். கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ராமதாஸ், பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

இதையும் படியுங்கள்... Sudheer Varma Suicide: திரையுலகில் பரபரப்பு... பிரபல இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

Tap to resize

குறிப்பாக சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை, வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, நயன்தாரா உடன் அறம், விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா, தனுஷுடன் மாரி 2 போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் இவர் நடித்திருந்தார். இதனிடையே நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஈ ராமதாஸ் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவுச் செய்தியை அவரது மகன் கலைச்செல்வன் சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “எனது தந்தை இயக்குநர், எழுத்தாளர், நடிகர் ஈ.ராமதாஸ் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதி சடங்குகள் 24/01/2023 காலை 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... யார் இந்த விக்ரமன்? வெற்றிவாய்ப்பை கடைசி நேரத்தில் நழுவ விட என்ன காரணம்..! ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்!

Latest Videos

click me!