ரொம்பவே பாசக்காரண்டா; கதிரை நினைத்து பெருமையாக ஃபீல் பண்ணிய பாண்டியனின் எமோஷனல் மூவ்மெண்ட்!

Published : Sep 23, 2025, 11:37 PM IST

Pandian Emotional Movement in Pandian Stores 2 Serial: கதிர் தனது பெயரை டிராவல்ஸீற்கு வைத்து தனக்கு பெருமை சேர்த்துள்ளதை எண்ணி பாண்டியன் பெருமிதம் கொண்டார். இது தொடர்பான எபிசோடு இன்றைய எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

PREV
16
உணர்ச்சிப்பூர்வமாக பேசிய பாண்டியன்

விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முழுக்க முழுக்க குடும்ப உறவுகளுக்கிடையில் நடக்கும் கதைகளை மையப்படுத்தி செண்டிமெண்ட், கோபம், சிரிப்பு, உணர்ச்சிப்பூர்வமான தருணம் என்று எல்லா அம்சமும் நிறைந்த ஒரு தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

26
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

ஏற்கனவே இந்த வாரம் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்த்தோம். இதைத் தொடர்ந்து நாள்தோறும் என்ன நடக்கிறது என்பது பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய 593ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்ப்போம். இன்றைய எபிசோடில் கதிர் தனது டிராவல்ஸ் திறப்பு விழாவிற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

36
பாண்டியன் டிராவல்ஸ்

இதைத் தொடர்ந்து மீனாவின் அப்பாவும், அம்மாவும் திறப்பு விழாவிற்கு வந்துள்ளனர். பழனிவேல் மற்றும் சுகன்யா இருவரும் கூட வந்துள்ளனர். இதற்கிடையில் கதிர் மற்றும் ராஜீயின் ரொமான்ஸ் காட்சியும் இடம் பெற்றிருந்தது. இவ்வளவு ஏன், மீனாவின் அப்பா, அம்மாவைத் தொடர்ந்து, தங்கமயிலின் அப்பாவும், அம்மாவும் வந்தனர். அவர்கள் குடும்பத்தோடு ஒற்றுமையாக இருப்பதை பார்த்த ராஜீ தனது குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லை. எப்போது நமது குடும்பம் ஒன்று சேரும் என்ற ஏக்கத்துடன் பார்த்தார்.

30 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு மகுடம் சூடிய ஷாருக் கான் – முதல் முறையாக கிடைத்த தேசிய விருது!

46
கதிர் மற்றும் பாண்டியன் பாசம்

அப்போது அவரது உணர்வை புரிந்து கொண்ட கதிர், அவருக்கு ஆறுதலாக உன்னுடைய அப்பா, அம்மாவும் சீக்கிரமாகவே வருவார்கள். இப்போது வரைக்கும் வாசல் வரை வந்திருக்கிறார்கள். இனி வீட்டிற்குள்ளயும் வந்துவிடுவார்கள் என்றார். இதைத் தொடர்ந்து எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பாண்டியன் வரவே, டிராவல்ஸ் திறப்பு விழா நடந்தது. முதலில் டிராவல்ஸிற்கு என்ன பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று வெளியிடப்பட்டது. அதில் பாண்டியன் டிராவல்ஸ் என்று டிராவல்ஸிற்கு பெயர் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

56
கோமதி ஆசை

மேலும், கோமதி எனக்கும் ராஜீக்கும் தான் போட்டி என்றார். ஆனால், அங்கு பாண்டியன் பெயர் இருந்ததைக் கண்டு கோமதி, பழனிவேல், சுகன்யா என்று ஒட்டு மொத்த உறவினர்களும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். பாண்டியனும் மெய் சிலிர்த்துப் போனார். அவர் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. அப்பா மகன் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவை இந்த ஒரு சீன் வெளிக்கொண்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. அப்படியொரு காட்சி தான்.

வெட்கம், மானம், சூடு சொரணை இல்லை! அமைதி காத்து ஏமாத்துறான்: கொதிக்கும் ஜாய்!

66
கதிர் டிராவல்ஸ் பிஸினஸ்

அதன் பிறகு கோமதி ரிப்பன் வெட்டி டிராவல்ஸை திறந்து வைத்தார். ராஜீ, தங்கமயில், மீனா, குழலி, அரசி என்று 5 பேரும் குத்து விளக்கேற்றி வைத்தனர். இதைத் தொடர்ந்து கதிர் மற்றும் ராஜீ இருவரும் பாண்டியன் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். இது பாண்டியனை கௌரவப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைந்தது. 

கதிரை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டே கடைக்கு சென்றார். கடைக்கு சென்ற அவர் ரொம்பவே பாசக்காரன். என்னதான் சண்டை போடுவதாக இருந்தாலும் அப்பா மீது அம்புட்டு பாசம் வைத்திருக்கிறான் அப்படி இப்படி என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்த காட்சியை காணும் போது கண்களில் கண்ணீர் வருகிறது. இந்த காட்சியோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு முடிந்தது இனி நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

71st National Film Awards : 12th Fail படத்திற்காக விக்ராந்த் மாஸ்ஸிக்கு சிறந்த நடிகர் விருது!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories