டெல்லி விஞ்ஞான பவனில் 71ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள், துணை நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என்று பல பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு அண்மையில் விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
கௌதமுக்கு கிடைத்த தண்டனை; மண்ணை கவ்விய வைஜெயந்தி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
இதில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. பொதுவாக சிறந்த நடிகருக்கு விருது பெறுபவர்கலுக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். ஆனால், ஷாருக் கான் உடன் இணைந்து 12ஆவது பெயில் (12th Fail) பட நடிகர் விக்ராந்த் மெஸ்ஸிக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இதன் காரணமாக அவருக்கும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.