நகையை திருடியது யார் என்ற உண்மையை தெரிந்து கொண்ட பாண்டியன், கதிர் மீது எந்த தப்பும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டு பெருமை படும் காட்சி தான் இன்று ஒளிபரப்பாகி உள்ளது.
விஜய் டிவில் இப்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2. இன்றைய எபிசோடில் ராஜீயின் நகையை திருடியது யார் என்ற உண்மையை பாண்டியன் தெரிந்து கொண்டுள்ளார். வீட்டு வாசலுக்கு கதிரை தேடி போலீஸ் வந்த நிலையில், கதிரும் அவசர அவசரமாக வீட்டிற்கு வந்துவிட்டார்.
26
கண்ணன் தான் குற்றவாளி:
கதிரிடம் நகையை பற்றி பாண்டியன் விசாரிக்க தொடங்கவே, உடனே ராஜீ தனது நகையை திருடிகிட்டு போனது பற்றி பேச ஆரம்பிக்கிறார். திருச்செந்தூர் போன போது எனது நகை திருடிட்டு போன்றது, என்னை வீட்டிலிருந்து கூட்டிச் சென்ற கண்ணன் தான், என்று ராஜூ கூற உடனே அவன் என்னுடைய நண்பன், அவனுக்கும், ராஜூக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவன் தான் எல்லா நகையையும் திருடிச் சென்றுவிட்டான் என்று கதிர் கூறினார்.
உடனே உள்ளே புகுந்த மீனா உண்மையில் ராஜீ நகையை கதிர் எடுக்கவில்லை. அவருடைய நண்பன் கண்ணன் தான் எடுத்துட்டு ஓடிவிட்டான். கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் ராஜூ,ரோட்டில் வைத்து கண்ணனை சந்தித்து அவனை பிடிக்க ஓடிய கதையையும், அது தான் பேப்பரில் வந்துச்சு.... நீங்கள் கூட பார்த்து கேட்பீர்களே மாமா, என்று சொல்ல அப்போது அவனை பற்றி போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்ததையும் விளக்குகிறார்.
46
அனைவருக்கும் தெரியவந்த உண்மை
அதை பற்றி பேசத்தான் இப்போது போலீஸ் வந்திருக்காங்க என கூறுகிறார். கடைசியில் எல்லா உண்மையும் தெரி்ந்து கொண்ட பாண்டியன் கதிர் மீது எந்த தவறும் இல்லை என்பதை புரிந்து கொள்கிறார். ஆனால், நகை திரும்ப கிடைக்க வாய்ப்பில்லை. அவனது சொத்து இருந்தால் அதனை விற்று காசு, பணம் திரும்ப வாங்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு வரும் அப்போது நீங்கள் வர வேண்டும் என்று சொல்லிவிட்டு போலீஸார் அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து கதிர் மீது எந்த தவறும் இல்லாததை புரிந்து கொண்ட பாண்டியன் கோபத்தின் உச்சத்திற்கு சென்று, எதிர் வீட்டு மச்சங்களான சக்திவேல் மற்றும் முத்துவேலை அழைத்து தனது பையன் மீது எந்த தவறும் இல்லை என்பதை கூப்பாடு போட்டு சொல்கிறார். நகையை எடுக்கவில்லை. தன்னுடைய மகனை நான் சரியாக தான் வளர்த்துள்ளேன் என்று பாண்டியன் பெருமை படுவதோடு, இன்றைய எபிசோடு முடிகிறது.
66
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நாளைய எபிசோடில் என்ன நடக்கும் என்பதற்கான புரோமோவையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டீம் இன்று வெளியிட்டனர். அதில், மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருக்கும் பாண்டியனிடம் சென்று ராஜீ, எங்கள் வீட்டு சைடில் கோபம் இருப்பது நியாயம், ஆனால், நீங்கள் ஏன் கதிரிடம் பாசமாக இருப்பதில்லை, எப்போதும் அவனுடன் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் என்று தனது மனதில் உள்ளவற்றை கேட்கிறார். இதற்கு பாண்டியன் என்ன பதில் சொல்வார் என்பது குறித்தும், அதன் பிறகு கதிரிடம் பாண்டியன் எப்படி நடந்து கொள்கிறார்?என்பது பற்றியும் நாளைய எபிசோடில் நாம் தெரிந்து கொள்வோம்.