திருமணம் என்ற பெயரில் ரூ.18.5 லட்சத்தை ஏமாற்றிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் நடிகை

Published : Jun 16, 2025, 03:04 PM ISTUpdated : Jun 16, 2025, 05:01 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பாகம் 2 சீரியலில் நடித்த நடிகை ஒருவர் மீது திருமண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

PREV
15
Pandian Stores 2 Actress Reehana Begum

சன் தொலைக்காட்சியில் ‘ஆனந்த ராகம்’, விஜய் தொலைக்காட்சியில் ‘பொன்னி’ மற்றும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘மீனாட்சி பொண்ணுங்க’ போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிஹானா பேகம். இவர் ‘பொன்னி’ சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடித்து வந்தார். அதற்கு முன்பாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பாகம் 2ல் குமரவேலுக்கு அம்மாவாக மாரி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது இவர் மீது சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் ராஜ் கண்ணப்பன் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் ரூ.18.5 லட்சம் மோசடி செய்ததாக புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

25
பிரபலங்களுக்கு பஞ்சாயத்து செய்யும் ரிஹானா

சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவாக இருப்பவர் ரிஹானா பேகம். இவர் பல பிரபலங்களின் குடும்ப பிரச்சனைகளை தலையிட்டு பேசி வருகிறார். மேலும் அவர்கள் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்தும் சமூக வலைதளங்களில் பேட்டிகளை அளித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அர்னவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டபோது ரிஹானா திவ்யாவுக்கு ஆதரவாக பேசி இருந்தார். மேலும் அர்னவுக்கு அறிவுரை கூறும் ஆடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல் சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டபோது விஷ்ணுகாந்துக்கு ஆதரவாக ரிஹானா பேசியிருந்தார்.

35
ரிஹானா மீது திருமண மோசடி புகார்

இவ்வாறு மற்ற சீரியல் நடிகர்களின் குடும்ப பிரச்சனைகளில் தலையிட்டு கருத்துக்களை கூறி வந்த ரிஹானா மீது தற்போது திருமண மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் ராஜ் கண்ணன் என்கிற தொழிலதிபர் இந்த புகாரை அளித்திருக்கிறார். அதில் ரிஹானாவிற்கு ஏற்கனவே ஹபிபுல்லா என்பவர் உடன் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் அவரை விவாகரத்து செய்யாமல் தன்னை திருமணம் செய்து கொண்டது தனக்கு பின்னர் தான் தெரியவந்தது. ரிஹானாவுக்கு ரூ.9 லட்சமும், அதன்பின்னர் சிறுக சிறுக 9.5 லட்சமும் பணம் ஆன்லைன் மூலம் கொடுத்திருக்கிறேன்.

45
ரூ.18.5 லட்சம் மோசடி செய்த ரிஹானா

திருமணத்திற்கு பின்னர் ரிஹானாவை பூந்தமல்லியில் உள்ள வீட்டில் வசிக்க அழைத்த போது, “சின்னத்திரையில் நடிக்க வேண்டும் என்பதால், பலருடன் பழக வேண்டும், இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்க வேண்டும்” என்று வற்புறுத்தினார் என அந்த புகாரில் ராஜ் கண்ணப்பன் கூறியிருக்கிறார். மேலும் தான் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.18.5 லட்சத்தை ரிஹானாவிடம் ஏமாந்ததாகவும், ரிஹானா, அவரது தாய் மும்தாஜ் மற்றும் முதல் கணவர் ஹபிபுல்லா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து இந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் அந்த புகாரில் ராஜ் கண்ணப்பன் கூறியுள்ளார்.

55
ரிஹானா மீது காவல்துறை விசாரணை

ராஜ் கண்ணப்பன் அளித்த புகாரை விசாரித்த காவல்துறை ரிஹானா, அவரது தாய், அவரது முதல் கணவர் ஹபிபுல்லா உட்பட மூவரையும் மாலை 3 மணிக்கு விசாரணைக்கு வரும்படி கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மற்றவர்களின் குடும்ப பிரச்சினைகளில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து வந்த ரிஹானா முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் மற்றும் பணம் மோசடி செய்துள்ளது சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories