Pandian Stores 2 Indraya Episode in Tamil : அரசியை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாண்டியன், குமரவேல் தனது மகளை கடத்தி சித்திரவதை செய்ததாக புகார் கொடுத்துள்ளார்.
Pandian Stores 2 Indraya Episode in Tamil : விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 2ஆவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, மாமா உறவுகளை மையப்படுத்தி ஒரு குடும்பக் கதையை ஒளிபரப்பு செய்து வருகிறது விஜய் டிவி.
25
குமரவேலுவை தூக்க வீட்டிற்கு வந்த போலீஸ்
இதில் பாண்டியனின் 3 மகன்களுக்கும் திருமணம் நடந்துள்ளது. மைத்துனன் பழனிவேலுவிற்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனால் மகளான அரசிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அது குமரவேலுவின் காரணமாக நின்று போனது. மேலும், அரசி தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு இத்தனை நாட்களாக குமரவேலுவின் மனைவியாக அவரது வீட்டில் இருந்தார்.
35
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு
ஒரு கட்டத்தில் இரு வீட்டாருக்கும் சண்டை வந்து, கதிர் மற்றும் குமரவேல் இருவரும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொண்டனர். கடைசியில் அரசி தன்னைப் பற்றிய எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து தான் கட்டிய தாலியை கழற்றி எரிந்து விட்டு தன்னுடைய அப்பாவின் வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு அரசிக்கு நடந்த இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் சுகன்யா தான் என்று மீனா மற்றும் ராஜீ இருவரும் சொல்ல கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கோமதி சுகன்யாவை சரமாரியாக வெளுத்து வாங்கினார்.
45
ஸ்டேஷனுக்கு சென்ற அரசி
கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தார். அதன் பாண்டியன் அறிவுரை சொல்லவே சுகன்யா சரி சரி என்று கேட்டுக் கொண்டார். ஆனால், அவரை திருத்தவே முடியாது என்று பழனிவேல் தனக்கு தானே எண்ணிக் கொண்டார். இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் பாண்டியன் குமரவேல் பற்றி போலீசில் புகார் அளிக்க சென்றார். அவருடன் கோமதி மற்றும் அரசி இருவரும் சென்றனர்.
55
குமரவேலுவை கைது செய்ய வீட்டிற்கு வந்த போலிஸ்
அப்போது தனக்கு நடந்த எல்லா பிரச்சனைகள் பற்றியும் அரசி காவல் நிலையத்தில் புட்டு புட்டு வைத்தார். தொடர்ந்து, குமரவேல் வீட்டிற்கு வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், சக்திவேல் மற்றும் முத்துவேல் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். எனினும் போலீசார் தங்களது வேலையில் கவனமாக இருந்தனர். அவர்கள் குமரவேலுவை கைது செய்வதிலேயே குறியாக இருந்தனர். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.