Pandiyan Store: பாண்டியன் ஸ்டோர் தனமா இது? மாடர்ன் உடையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகிய போட்டோஸ்!

Published : Dec 04, 2021, 06:38 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் அண்ணியாக நடித்து வரும் சுஜிதா... செம்ம ஸ்டைலிஷாக வெள்ளை நிற உடையில் தற்போது எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
110
Pandiyan Store: பாண்டியன் ஸ்டோர் தனமா இது? மாடர்ன் உடையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகிய போட்டோஸ்!

தமிழ் திரையுலகில் அப்பாஸ், மற்றும் முந்தானை முடிச்சி ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகவும் பிரபலமானவர் தான் சுஜிதா.

 

210

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளிலும்... சுமார் 30 க்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

 

310

என்னதான் அழகும், நடிப்பு திறமையும் இருந்தாலும் இவரால் வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிக்க முடியவில்லை,

410

ஆனால், பல தொலைக்காட்சி தொடர்களில்... அடுத்தடுத்து ஹீரோயினாக நடித்தார். சில முன்னணி நடிகர்களின் படங்களில் தங்கை போன்ற வேடங்களிலும் நடித்து கலக்கினார்.

510

திருமணம் ஆகி குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு சில காலம் சின்னத்திரம் மற்றும் வெள்ளித்திரை பக்கமே தலை காட்டாமல் இருந்த இவர் மீண்டும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார்.

610

இந்த சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. இவரது கதாபாத்திரத்துக்கும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

710

இந்த சீரியல் நடிக்க துவங்கிய பின்னர், நடிப்பில் மட்டும் இன்றி... சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக செயல்பட்டு வருகிறார் சுஜிதா.

810

அவ்வப்போது தன்னுடைய விதவிதமான புகைப்படங்கள் மற்றும் , கணவர், மகனுடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

910

தற்போது வெள்ளை நிற சல்வாரில்... ஹீரோயின்களையே மிஞ்சும் அழகில் சுஜிதா எடுத்து கொண்டுள்ள ரீசென்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

1010

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர் தனமா இது? என்று மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்...

click me!

Recommended Stories