'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து விலகுகிறாரா முக்கிய நடிகர்..? பரபரப்பு தகவல்..!

First Published | Apr 24, 2021, 2:26 PM IST

'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் விலக உள்ளதாக வெளியாகியல்ல தகவல், அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், மற்ற சீரியல்களை டி.ஆர்.பி-யில் அடித்து நொறுக்கி கெத்து காட்டி வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்'. அண்ணன் தம்பிகளின் பாசமான நினைவுகளை மனதில் பதித்துள்ள இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்குமே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த சீரியலை, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்துள்ளனர்.
Tap to resize

மேலும் இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்குமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எனவே இந்த சீரியல் குறித்தும், இதில் நடிக்கும் பிரபலங்கள் குறித்து எந்த தகவல் வெளியானாலும் அது வைரலாகி விடுகிறது.
அந்த வகையில் சமீபத்தில், இந்த சீரியலில் கதிர் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். இவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு தான், இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பதிவில் நிகழ்ச்சி ஒன்றை பற்றி குறிப்பிட்டு 'நீங்கள் அனைவரும் நிகழ்ச்சியை அனுபவித்தீர்கள் என நம்புகிறேன். நான் அதில் நன்றாக செய்தேன். வெற்றி, வெற்றி இல்லை என்பதை எல்லாம் தாண்டி நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அதே வழியில் நீங்கள் அனைவரும் பார்த்தவற்றுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இப்போது நாம் அனைவரும் அடுத்ததில் கவனம் செலுத்துவோம்' என பதிவிட்டிருந்தார்.
இதனால், குமரனுக்கு சீரியலை தொடர்ந்து, அடுத்தடுத்த படவாய்ப்புகள் வருவதால்... படத்தில் நடிக்க உள்ளதால் சீரியலில் இருந்து அவர் விலக உள்ளதாக தகவல் பரவியது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலில், இது முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. எதார்த்தமாக போட்ட பதிவை சில, இப்படி திருத்து கூறியதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!