பல்லாவரம் டூ பான் இந்தியா; சமந்தாவின் சாதனைப் பயணம் ஒரு பார்வை

Published : Apr 28, 2025, 08:29 AM IST

நடிகை சமந்தா இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது அழகிய திரைப் பயணம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
பல்லாவரம் டூ பான் இந்தியா; சமந்தாவின் சாதனைப் பயணம் ஒரு பார்வை

Happy Birthday Samantha Ruth prabhu : தமிழ் சினிமா உலகில் ஒரு தமிழ்ப் பெண் முன்னணி கதாநாயகியாக ஜொலிப்பது, குதிரைக் கொம்பாகவே இருந்தது. 90களில் அக்கதையை மாற்றி சாதித்துக் காட்டினார் திரிஷா. அவருக்கு பின் அந்த இடத்தில் பொன் வசந்தமாக அமர்ந்தவர் நடிகை சமந்தா. சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவரான சமந்தா. கெளதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் சிறு கதாபாத்திரத்திலும், அப்படத்தின் தெலுங்கு பதிப்பில் கதாநாயகியாகவும் நடித்து ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டார் சமந்தா.

25
Samantha

கோலிவுட் ரசிகர்களின் கனவு நாயகி சமந்தா

ரவி வர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவிரி, அதர்வா ஹீரோவாக அறிமுகமான பாணா காத்தாடி படங்களின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சமந்தா. அப்போதே சமந்தாவின் க்யூட்டான அழகில் மயங்கிய சினிமா ரசிகர்கள், நூல் அறுந்த பட்டமாய் தங்கள் மனங்களை தொலைத்தனர். ஜூனியர் என்.டி.ஆர் உடன் பிருந்தாவனம், மகேஷ் பாபு உடன் தூக்குடு, எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஈகா என தெலுங்கில் ஸ்டாராக ஜொலித்த சமந்தா, கெளதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் ஜீவாவின் காதல் கண்மணியாக நடித்து கோலிவுட் ரசிகர்களின் கனவு நாயகி ஆனார்.

இதையும் படியுங்கள்... கைவசம் 1500 கோடி பட்ஜெட் படங்கள்; மாஸ் கம்பேக் கொடுக்க ரெடியான மெர்சல் நாயகி சமந்தா!

35
Samantha Ruth Prabhu

சமத்துப் பெண் சமந்தா

பின்னர் சூர்யா ஜோடியாக அஞ்சான், விக்ரமுடன் பத்து என்றதுக்குள்ள, சிவகார்த்திகேயன் உடன் சீமராஜா, தனுஷ் உடன் தங்கமகன் என முன்னணி நாயகர்களின் நாயகியாகி சமத்துப் பெண் சமந்தா என்று பெயர் பெற்றார். மேலும் தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் சினிமாவை கலையாகவும், தொழில்முறை உணர்வுடனும் அணுகும் அவரது பாங்கை காட்டியது. 

45
Samantha Birthday

மெர்சல் நாயகி சமந்தா

நாயகிகளின் சிகரமான சமந்தா, அடுத்தடுத்து விஜய் உடன் கத்தி, தெறி, மெர்சல் என மூன்று வெற்றிப்படங்களில் நடித்தார். இந்த மூன்று திரைப்படங்களிலும் தனக்கான பாத்திரத்தை அழகோடு ரசிக்கும்படி வார்த்தார் சமந்தா. அதோடு சிம்ரன், திரிஷா வரிசையில் விஜய்யுடன் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நடிகையாக விஜய் ரசிகர்களின் அன்பையும் பெற்றார் சமந்தா.

55
HBD Samantha

சமந்தா பிறந்தநாள்

பெரிய நட்சத்திரமாக மாறிய பின்னும் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், நடிகையர் திலகம் திரைப்படத்தில் இரண்டாம் நிலை கதாபாத்திரத்திலும், புஷ்பா திரைப்படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ என்கிற குத்துப்பாடலுக்கு அட்டகாச ஆட்டம் போட்டும் சினிமா மீதான தன் காதலை சொன்ன சமந்தா, சாமானிய பெண்களின் தன்னம்பிக்கையின் அழகிய ஓவியமாக திகழ்கிறார். அவர் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களிலும் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... சமந்தா நடிக்க மறுத்து ஹிட்டான டாப் படங்கள் என்னென்ன?

Read more Photos on
click me!

Recommended Stories