ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்மிருதிக்கு முன்பே திருமணத்தை ஒத்திவைக்க வேண்டும் என முதலில் சொன்னதே பலாஷ் முச்சல் தான் என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நேற்று முன்தினம் மகாராஷ்டிராவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், கடைசி நேரத்தில் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அதாவது தாலி கட்டும் முன்பு ஸ்மிருதி மந்தனாவின் தந்தை சீனிவாஸுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
24
மந்தனாவின் தந்தைக்கு மாராடைப்பு
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சீனிவாஸின் உடல் நிலை தேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனது தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திருமணத்தை தள்ளிவைகும்படி ஸ்மிருதி மந்தனா முடிவு எடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.இதன் காரணமாக ஸ்மிருதி மந்தனா, பலாஷ் முச்சல் திருமணம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
34
பலாஷ் முச்சல் தான் முடிவெடுத்தார்
இந்த நிலையில், ஸ்மிருதி மந்தனாவுக்கு முன்பே பலாஷ் முச்சல் திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்ததாக அவரது தாயார் அமிதா முச்சால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இஸ்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கு பேட்டியளித்த அமிதா முச்சல், ''பலாஷுக்கு மாமாவிடம் (ஸ்மிருதியின் தந்தை) அதிக பாசம் உள்ளது.
ஸ்மிருதியை விட இவர்கள் இருவரும் நெருக்கமானவர்கள். எனவே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மாமா குணமடையும் வரை திருமணம் வேண்டாம். திருமண சடங்குகளைத் தொடர வேண்டாம் என்று ஸ்மிருதிக்கு முன் பலாஷ் தான் முடிவெடுத்தார்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஸ்மிருதி மந்தனாவின் தந்தையை போன்று அவரது வருங்கால கணவர் பலாஷ் முச்சலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். வைரஸ் தொற்று மற்றும் அமிலத்தன்மை காரணமாக பலாஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்பு சிகிச்சைக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.