Pakistani Film Mera Lyari இந்தியாவின் 'துரந்தர்' படம் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக சித்தரித்ததாகக் கூறி, அதற்குப் பதிலாக 'மேரா லியாரி' என்ற படத்தை பாகிஸ்தான் வெளியிட்டது.
பாகிஸ்தான் திரையுலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'மேரா லியாரி' திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைக்கும் என கருதி வந்தனர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் சூப்பர்ஹிட் படமான 'துரந்தர்' படத்திற்கு இது பதிலடியாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், வெளியான பிறகு வந்த வசூல் விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாகிஸ்தானுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. லேட்டஸ்ட் தகவலின்படி, படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து எந்த வரவேற்பும் கிடைக்கவில்லை, முதல் நாளிலேயே அதன் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இதன் காரணமாக முதல் நாளிலேயே பல திரையரங்குகளில் இருந்து அப்படம் நீக்கப்பட்டுள்ளது.
25
வெறும் 22 டிக்கெட் விற்பனை
மேரா லியாரி மே 8ந் தேதி அன்று பாகிஸ்தானில் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் 'துரந்தர்' படத்திற்கு பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தானில் ஆரம்பம் முதலே பேசப்பட்டது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் அதன் ரெஸ்பான்ஸ் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக இருந்தது. பாகிஸ்தான் ஊடகங்களின்படி, முதல் நாளில் இந்த படத்திற்கு 22 டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்பட்டன. படத்தின் இந்த ஏமாற்றமளிக்கும் ரெஸ்பான்ஸை கண்டு, முதல் நாளிலேயே பல திரையரங்குகளில் இருந்து அது நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்த படம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு வருகிறது.
35
லியாரி பெண்களின் போராட்டம்
இப்படத்தின் கதை லியாரி பெண்களின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. அங்குள்ள பெண்கள் எப்படி பழமைவாதத்திற்கு எதிராகப் போராடி சமூகத்தில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இருப்பினும், இந்த கதை பார்வையாளர்களின் இதயங்களை வெல்வதில் முற்றிலும் தோல்வியடைந்தது. தகவல்படி, 'துரந்தர்' பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்டது, ஆனால் அதன் பைரசி வெர்ஷன் அங்கு அதிகளவில் பார்க்கப்பட்டது. இந்த சர்ச்சைக்குப் பிறகு, உள்ளூர் கதையைக் காட்ட 'மேரா லியாரி' போன்ற படங்களைத் தயாரிக்கும் பேச்சு தொடங்கியது.
'மேரா லியாரி' படத்தை அபு அலிஹா இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆயிஷா உமர், தனனீர் மொபீன், சாமியா மும்தாஜ், டிரினெட் லூகாஸ் போன்ற கலைஞர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாகிஸ்தானின் சிந்து அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்தது. அவர்கள் இந்தப் படத்தை வெளிப்படையாக விளம்பரப்படுத்தினர். ஆனால் இத்தனை முயற்சிகள் எடுத்தும், படம் முதல் நாளிலேயே படுதோல்வி அடைந்தது. மேரே லியாரி படத்தின் படுதோல்வியால் படக்குழுவினர் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள்.
55
படுதோல்வி அடைந்த மேரா லியாரி
ஆதித்யா தர் இயக்கிய 'துரந்தர்' படத்தின் இரண்டு பாகங்களும் 3000 கோடி ரூபாய் வசூலித்து சூப்பர் ஹிட் ஆனது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டாலும், மக்கள் பைரசி மூலம் படத்தைப் பார்த்து பாராட்டினர். இதில் பாகிஸ்தானின் தீவிரவாத முகம் காட்டப்பட்டதால், இதற்குப் பதிலாக 'மேரா லியாரி' படத்தை எடுத்தனர். 'துரந்தர்' படத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார். கராச்சியின் தீவிரவாத நடவடிக்கைகள், இந்தியா மீதான தாக்குதல் திட்டங்கள் போன்றவற்றை இப்படம் காட்டியது. ஆனால், 'மேரா லியாரி' பாகிஸ்தானை நல்லவர்கள் வாழும் நாடாக சித்தரித்தது. இருப்பினும், படம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.