Karuppu Review : கருப்பு காத்திருப்புக்கு ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முதல் பாதி விமர்சனம்

Published : May 15, 2026, 11:08 AM IST

Karuppu Review : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மாஸ் ஆக ரிலீஸ் ஆகி உள்ள கருப்பு திரைப்படத்தின் முதல் பாதி முடிவடைந்துள்ள நிலையில், அதன் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Karuppu Movie Review

சூர்யா நடிப்பில் ஆக்‌ஷன் விருந்தாக திரைக்கு வந்துள்ள திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். நேற்று ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம், சில பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. கருப்பு படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்த்த ரசிகர்கள், முதல் பாதி முடிந்ததுமே தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

25
Karuppu First Half Review

ஆக்‌ஷன் மற்றும் எமோஷன்களுடன் ஒரு ஃபுல் கமர்ஷியல் பேக்கேஜ் தான் கருப்பு. சூர்யாவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மற்றும் கருப்பசாமி தோற்றம் அட்டகாசமாக உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி எந்தக் குறையும் இல்லாத சுவாரஸ்யமான திரைக்கதை உடன் படத்தை எடுத்துள்ளார். ஒப்பனிங் சண்டைக் காட்சி மற்றும் இண்டர்வெல் சீன் சாய் அபயங்கரின் இசையால் உச்சம் தொடுகின்றன. எமோஷனல் காட்சிகள் படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளன. இண்டர்வெல் காட்சி கூஸ்பம்ஸ் வர வைக்கிறது. விறுவிறுப்பான இரண்டாம் பாதிக்காக வெயிட்டிங் என பதிவிட்டுள்ளார்.

35
கருப்பு ட்விட்டர் விமர்சனம்

அநீதியிடமிருந்து மக்களைக் காக்க 90-களில் அம்மன் இறங்கி வந்த கதைகளை நாம் பார்த்திருப்போம். அதே பாணியில், இங்கு மக்களைக் காக்க கருப்பசாமி வருகிறார். பழக்கப்பட்ட பழைய பாணியிலான கதை என்றாலும், திரைக்கதை எங்கும் தொய்வில்லாமல் நகர்வது சிறப்பு. சாயின் பின்னணி இசை பல இடங்களில் வேற லெவல்! படத்தின் பல காட்சிகளைத் தாங்கிப் பிடிப்பதே இசைதான்.

45
கருப்பு எப்படி இருக்கு?

சூர்யா அண்ணா எப்போதும் போல தனது நடிப்பால் மிரட்டியிருக்கிறார். இந்த்ரன்ஸ் மற்றும் அனகா ரவி தங்களது கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக உள்ளனர். சுவாசிகா மற்றும் திரிஷா கதாபாத்திரங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆர்.ஜே.பாலாஜி நடிப்பு ஓகே என்றாலும், ஒரு பவர்ஃபுல் வில்லன் கதாபாத்திரத்திற்கு அவர் எந்தளவுக்குப் பொருந்துகிறார் என்ற கேள்வி எழுகிறது. இண்டர்வெல் சண்டைக் காட்சி தரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியில் தான் தியேட்டரிக்கள் மொமண்ட்ஸ் அதிகமா இருக்குனு சொன்னாங்க, பொறுத்திருந்து பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

55
கருப்பு விமர்சனம்

கருப்பு முதல் பாதி சூப்பர். கடவுள் வெர்சஸ் மனிதன் தான் கதை. சூர்யா ஸ்கிரீன் பிரசன்ஸ் செம, திரிஷா கார்ஜியஸ் ஆக இருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜிக்கு டீசண்ட் ஆன ரோல், மலையாள நடிகர் இந்திரன்ஸ் நடிப்பு அருமை. சாய் அபயங்கரின் இசை பிளாஸ்டாக உள்ளது. இண்டர்வெல் சீன் உச்சம் தொடுகிறது. கடவுள் மோடு ஆரம்பம், பலமான இரண்டாம் பாதிக்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories