
தமிழ் சினிமாவில் தன்னைத் தானே செதுக்கியவர் என்றால் அது அஜித்குமார் தான். எந்தவித பின்புலமும் இன்றி சினிமாவுக்குள் வந்து தன்னுடைய விடாமுயற்சியால் இன்று விஸ்வரூப வெற்றியை பெற்று கோலிவுட்டின் தனிப்பெரும் ஆளுமையாக உருவெடுத்துள்ளார் அஜித்குமார். இவரது திரைப்பயணத்தில் பல்வேறு வெற்றி, தோல்விகளை கண்டிருக்கிறார். ஆனால் ஒருபோது வெற்றியால் தலைக்கணம் அடைந்ததில்லை. அதேபோல் தோல்வியால் துவண்டுபோனதும் இல்லை.
நடிகர் அஜித்குமார் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்றளவும் அவருக்கான கிரேஸ் ரசிகர்கள் மத்தியில் குறைந்தபாடில்லை. நடிகர் என்றால் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள பப்ளிசிட்டி தேடுவார்கள். ஆனால் அஜித் அதில் தனித்து விளங்குபவர். அவர் மீடியா வெளிச்சத்தையே விரும்பாதவர். அதுமட்டுமின்றி அவருக்கென சோசியல் மீடியா கணக்குகள் இல்லை. தன்னை நேசிக்கும் ரசிகர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார் அஜித்.
அஜித் வைத்திருக்கும் இந்த அன்பின் காரணமாகவே அவருக்கான ரசிகர் படை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சினிமாவை தாண்டி அஜித்துக்கு கார் ரேஸ் மீதும் அலாதி பிரியம். இதன் காரணமாக சினிமாவுக்குள் நுழைந்த பின்னரும் கார் ரேஸில் கலந்துகொண்டு வந்தார் அஜித், ஆனால் ஒரு கட்டத்தில் அதில் விபத்தில் சிக்கிய பின்னர் கடந்த சில ஆண்டுகளாக கார் ரேஸில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்த அஜித், இந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
இதையும் படியுங்கள்... நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!
கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக அவர் தன் கைவசம் உள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களின் பணிகளையும் விறுவிறுவென முடித்துக் கொடுத்துவிட்டு சென்றார். அப்போது கார் பந்தயம் முடிந்த பின்னர் பட பணிகளை முடிக்கலாமே சார் என விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி சொன்னபோது, ரேஸில் எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம், அதனால் படம் பாதித்துவிடக் கூடாது, அதன் காரணமாக படப்பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு செல்கிறேன் என சொன்னாராம்.
இப்படி தங்கமான மனம் கொண்டவருக்கு ரேஸில் வெற்றியும் கிடைத்தது. அவரது அணி மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தியது. இப்படி சினிமா, கார் ரேஸ் என செம பிசியாக இருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு நேற்று இரவு மத்திய அரசு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அதன்படி அவருக்கு இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய விருதாக கருதப்படும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை கொடுத்ததற்காக அஜித்துக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
பத்ம பூஷன் விருது வென்றுள்ள நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்குமாரின் சொத்து மதிப்பு ரூ.350 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவரிடம் Porsche GT3 RS, Ferrari SF90, BMW 740Li, Mercedes-Benz 350 GLS, Lamborghini போன்ற சொகுசு கார்கள் உள்ளன. இதுதவிர சென்னையில் பல கோடி மதிப்பில் ஆடம்பர பங்களா ஒன்றையும் கட்டி இருக்கிறார் அஜித்.
இதையும் படியுங்கள்... பத்ம விருதைப் பெறுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்: நடிகர் அஜித்