ஷாருக்கானுக்கு ரூ. 9 கோடி கொடுக்கும் மகாராஷ்டிரா அரசு; காரணம் என்ன?

Published : Jan 25, 2025, 08:19 PM IST

Shah Rukh Khan Mannat Luxurious House : ஷாருக்கான் ரூ.9 கோடியை திரும்ப கேட்கும் நிலையில் மகாராஷ்டிரா அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றன.

PREV
15
ஷாருக்கானுக்கு ரூ. 9 கோடி கொடுக்கும் மகாராஷ்டிரா அரசு; காரணம் என்ன?
Shah Rukh Khan

பாலிவுட் கிங் காங் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக டன்கி படம் வெளியானது. அதற்கும் முன் ஜவான் படம் வெளியானது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.1100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது. இப்போது வரையில் ஷாருக்கான் எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மகாராஷ்டிரா அரசு ஷாருக்கானுக்கு ரூ.9 கோடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன காரணம்? ஏன் ரூ.9 கோடி கொடுக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

25
Maharashtra government

ஷாருக்கானின் கூற்றுப்படி, அவர் கோரும் ரூ.9 கோடியானது ஷாருக்கானின் வீடானது மன்னத் அமைந்துள்ள நிலத்திற்காக கொடுக்கப்பட்ட அதிக்கப்படியான தொகை. இதைத் தான் இப்போது ஷாருக்கான் திரும்ப கேட்கிறார். ஷாருக்கான் கானின் வீடு மன்னத், மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள பேண்ட்ஸ்டாண்டில் உள்ளது. இது ஷாருக்கான் மற்றும் கௌரி கானுக்கு சொந்தமானது. அந்த வீட்டில் தான் இப்போது ஷாருக்கான் வசித்து வருகிறார்.

35
Shah Rukh Khan Rs 9 Crore

இப்போது ஷாருக்கான் இருக்கும் இடமானது, மகாராஷ்டிரா அரசால் குத்தகைக்கு விடப்பட்ட நிலம். ஷாருக்கானுக்கு முன்னதாக வேறொரு உரிமையாளர் அந்த இடத்தை குத்தைக்கு எடுத்திருந்தார். அப்படி குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கு அரசு ஒப்புதல் அளித்த நிலையில் அந்த இடத்தை முந்தைய உரிமையாளர் ஷாருக்கானுக்கு விற்றுள்ளார். இப்போது ஷாருக்கான் மற்றும் கௌரி கான் இருவரும் இணைந்து அந்த இடத்திற்கு அதிகமாக கொடுத்த பணத்தை திரும்ப கேட்கின்றனர். அதன்படி மகாராஷ்டிரா அரசிடமிருந்து அவர்கள் கேட்பது ரூ.9 கோடி. மன்னத் 2,446 சதுர மீட்டர் கொண்ட இடமானது கௌரி மற்றும் ஷாருக்கான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பெயருக்கு மாற்றப்படுவதற்கு முன்பு அரசு பெயரில் தான் அந்த இடம் இருந்துள்ளது.

45
Shah Rukh Khan Wife Gauri Khan

குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்களை ஃப்ரீஹோல்டு சொத்துக்களாக மாற்ற அனுமதிக்கும் அரசின் கொள்கையை ஷாருக்கான் மற்றும் கௌரி கான் இருவரும் முடிவு செய்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷாருக்கான் மற்றும் கௌரி கான் இருவரும் (ரெடி ரெக்கனர் விலை எனப்படும் அரசு நிர்ணயிக்கும் நிலம், வணிக சொத்து மற்றும் குடியிருப்பு சொத்துக்களின் குறைந்தபட்ச விலை) ரெடி ரெக்கனர் விலையில் 25 சதவிகிதம் அதாவது ரூ.27.50 கோடியை கட்டியிருக்கின்றனர்.

55
Mannat

ஆனால், இது அரசால் செய்த தவறின் காரணமாக காட்டப்பட்ட தொகை என்று மாற்று கட்டணத்தை கணக்கிடும் போது ஷாருக்கான் மற்றும் கௌரி கான் இருவரும் கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக தங்கள் அதிக தொகையை செலுத்திவிட்டதாக கூறி கூடுதல் தொகையை திரும்ப கேட்டுள்ளனர். இதற்கு மகாராஷ்டிரா அரசும் ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories