சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை ஒட்டி அவர் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான படையப்பா ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதன் முதல் நாள் வசூல் நிலவரத்தை இங்கே பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவர் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் வகையில் அவரின் 75வது பிறந்தநாள் அன்று அவர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படையப்பா திரைப்படத்தை நேற்று ரீ-ரிலீஸ் செய்தனர். ரஜினிகாந்தின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த படம் படையப்பா. கடந்த 1999-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். இப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் தன்னுடைய நண்பர்கள் மூலம் தயாரித்து இருந்தார்.
24
படையப்பா ரீ-ரிலீஸ்
படையப்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததற்கு அதில் நடித்த நடிகர்கள் தான் முக்கிய காரணம். குறிப்பாக படையப்பாவாக ரஜினியும், நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணனும் போட்டிபோட்டு நடித்திருந்தார். சிவாஜி கணேசன் படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். அப்படத்திற்காக சிவாஜி கணேசனுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. அவருடைய கெரியரில் அவர் அதிக சம்பளம் வாங்கிய படம் படையப்பா தான். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேறலெவல் ஹிட் அடித்தன.
34
வரவேற்பை பெறும் படையப்பா
படையப்பா திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக செளந்தர்யா நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் ஐகானிக் படங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் படையப்பா நேற்று ரீ-ரிலீஸ் ஆன நிலையில், அதற்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு கிடைத்து வருகிறது. நேற்று வெளியாக இருந்த கார்த்தியின் வா வாத்தியார், அனுபமாவின் லாக்டவுன் ஆகிய திரைப்படங்கள் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டதால், அது படையப்பா படத்திற்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக அமைந்திருக்கிறது. இதனால் நேற்று வெளியான படங்களைக் காட்டிலும் அதிக வசூலை வாரிக்குவித்து இருக்கிறது படையப்பா.
படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆன முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.2.27 கோடி வசூலித்து இருக்கிறது. இப்படம் கர்நாடகாவில் ரூ.29 லட்சம் வசூல் செய்துள்ளதாம். இப்படம் வெளியான போதே கில்லி ரீ-ரிலீஸ் வசூல் சாதனையை முறியடிக்கும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் நிலவரப்படி, கில்லி ரீ-ரிலீஸ் வசூலை படையப்பா முறியடிக்கவில்லை. கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆன போது முதல் நாள் ரூ.3.1 கோடி வசூல் செய்தது. தமிழ் சினிமா வரலாற்றில் ரீ-ரிலீஸ் படத்திற்கு முதல் நாள் கிடைத்த அதிக வசூல் இதுவாகும். இந்த சாதனையை ஜஸ்ட் மிஸ்ஸில் நழுவ விட்டுள்ளது படையப்பா.