இனி நான் சிங்கிள் இல்ல... காதலர் தினத்தன்று காதலியை அறிமுகப்படுத்திய காளிதாஸ் ஜெயராம்

Published : Feb 14, 2023, 02:43 PM IST

காதலர் தினமான இன்று தனது காதலி உடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தான் இனி சிங்கிள் இல்லை என்பதை அறிவித்துள்ளார் காளிதாஸ் ஜெயராம்.

PREV
14
இனி நான் சிங்கிள் இல்ல... காதலர் தினத்தன்று காதலியை அறிமுகப்படுத்திய காளிதாஸ் ஜெயராம்

மலையாள நடிகர் ஜெயராம், தமிழில் ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் கூட ஆழ்வார்க்கடியான் நம்பியாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். இவரது மகனான காளிதாஸும் சினிமாவில் இளம் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் காளிதாஸ்.

24

தமிழிலும் இவர் நடிப்பில் ஒருபக்க கதை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்கள் வெளியாகின. இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகனாக நடித்திருந்தார் காளிதாஸ். அதோடு புத்தம் புது காலை, பாவக்கதைகள் போன்ற ஆந்தாலஜி படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். குறிப்பாக பாவக்கதைகள் ஆந்தாலஜியில் சுதா கொங்கரா இயக்கிய குறும்படத்தில் காளிதாஸ் திருநங்கையாக நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

இதையும் படியுங்கள்... மேட்சிங்... மேட்சிங் உடையணிந்து காஷ்மீரில் லியோ படக்குழுவினருடன் காதலர் தினத்தை கொண்டாடிய திரிஷா

34

இந்நிலையில், கடந்த ஆண்டு துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்தபோது கப்பலில் தாரினி என்கிற மாடல் அழகியை கட்டிப்பிடித்தபடி புகைப்படம் வெளியிட்டு இருந்தார் காளிதாஸ். அப்போது இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறி இருந்தனர். இந்நிலையில் தற்போது இருவரும் காதலிப்பதை உறுதி செய்துள்ளனர். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் அறிவித்து உள்ளனர்.

44

காதலர் தினமான இன்று தனது காதலியான மாடல் அழகி தாரினி உடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, இனி நான் சிங்கிள் இல்லை என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டு தனது காதலியை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த காதல் ஜோடிக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். காளிதாஸ் நடிப்பில் பக்கத்தில கொஞ்சம் காதல் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது.

இதையும் படியுங்கள்... இன்று எனக்கு கருப்பு நாள்... அரைகுறை ஆடையோடு காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆண்ட்ரியா

click me!

Recommended Stories