மார்ச் 28ந் தேதி ஓடிடியில் ஒன்னில்ல ரெண்டில்ல அரை டஜன் படங்கள் வருது - லிஸ்ட் இதோ

ஓம் காளி ஜெய் காளி வெப் தொடரில் தொடங்கி, ஆதி நடித்த சப்தம் திரைப்படம் வரை மார்ச் 28ந் தேதி ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

Om kali Jai Kali to sabdham here the OTT Release Movies and Web Series on March 28 gan

March 28 OTT Release Tamil Movies : மார்ச் மாதம் தமிழ் சினிமாவுக்கு ஒரு மந்தமான மாதமாகவே அமைந்துள்ளது. ஏனெனில் இந்த மாதம் இதுவரை தியேட்டரில் ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் ஒரு படம் கூட ஹிட்டாகவில்லை. இதனால் இந்த வாரம் ரிலீஸ் ஆக இருந்த வீர தீர சூரன் படத்தை ரசிகர்கள் மலைபோல் நம்பி இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அப்படமும் பைனான்ஸ் பிரச்சனையால் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டர் ரிலீஸ் ஏமாற்றம் அளித்தாலும் இந்த வாரம் ஓடிடியில் அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

Om kali Jai Kali to sabdham here the OTT Release Movies and Web Series on March 28 gan

சப்தம்

ஈரம், வல்லினம் போன்ற படங்களை இயக்கியவர் அறிவழகன். இவர் இயக்கத்தில் ஆதி ஹீரோவாக நடித்த படம் தான் சப்தம். இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. இதில் லட்சுமி மேனன், சிம்ரன், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. டிராகன் படத்தால் இப்படம் வந்தது தெரியாமல் காணாமல் போனது. தியேட்டரில் இப்படத்தை மிஸ் பண்ணிய ரசிகர்கள் வருகிற மார்ச் 28ந் தேதி சப்தம் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.


அகத்தியா

பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம் அகத்தியா. இப்படமும் கடந்த மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தில் ராஷி கண்ணா ஹீரோயினாக நடித்திருந்தார். ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகி இருந்த அகத்தியா, தியேட்டரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்நிலையில், இப்படம் வருகிற மார்ச் 28-ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஃபயர்

ஜே.எஸ்.கே சதீஷ் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் நடித்த படம் ஃபயர். இப்படத்தில் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சாந்தினி, சாக்‌ஷி அகர்வால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படம் இந்த வாரம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

ஓம் காளி ஜெய் காளி

விமல் நாயகனாக நடித்துள்ள ஓம் காளி ஜெய் காளி வெப் தொடரும் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. இந்த வெப் தொடரை ராமு செல்லப்பா இயக்கி உள்ளார். தசரா பண்டிகையை பின்னணியாக வைத்து இந்த வெப் தொடர் உருவாகி உள்ளது. இதில் குக் வித் கோமாளி புகழ், நடிகை திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் வருகிற மார்ச் 28ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... ஓடிடி தளங்களில் ஆபாச கருத்துகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாடாளுமன்ற குழு!

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்

பிக் பாஸ் லாஸ்லியாவும் யூடியூபர் ஹரிபாஸ்கரும் ஜோடியாக நடித்த படம் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங். இப்படம் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்த நிலையில், தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

முஃபாசா தி லயன் கிங்

குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கப்பட்ட மோசன் கேப்சர் திரைப்படம் தான் முஃபாசா தி லயன் கிங். இப்படம் உலகளவில் வசூலில் சக்கைப்போடு போட்ட நிலையில், தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. வருகிற மார்ச் 28ந் தேதி இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

செருப்புகள் ஜாக்கிரதை

ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் சிங்கம்புலி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் தொடர் செருப்புகள் ஜாக்கிரதை. இதில் விவேக் ராஜகோபால், மனோகர், ஐரா அகர்வால், இந்திரஜித், மாப்ள கணேஷ், சபிதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நகைச்சுவை வெப் தொடர் வருகிற மார்ச் 28ந் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... Jana Nayagan: மிகப்பெரிய தொகைக்கு 'ஜனநாயகன்' ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்!

Latest Videos

vuukle one pixel image
click me!