Veera Dheera Sooran தங்கலான் தோல்விக்கு பின்னர், சியான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "வீர தீர சூரன்" . இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின், 2-ஆவது பாகத்தை முதலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டனர். அதன் படி இன்று (மார்ச் 27-ஆம் தேதி) இப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் முன்பதிவுகளும் தமிழகத்தில் நடந்தது.
வீர தீர சூரன்' படத்தை 4 வாரங்கள் ரிலீஸ் செய்ய தடை
ஆனால் கடைசி நேரத்தில் இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை பெற்றுள்ள பி4யு எண்டர்டெயின்மென்ட், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இப்படத்தின் ரிலீசுக்கு பிரச்சனையாக மாறியது. அதாவது ஒப்பந்தத்தை மீறி, 'வீரதீர சூரன்' திரைப்படத்தை வெளியிடுவதற்கு, எதிராக ஐ.வி.ஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, நீதிபதி மன்மீத் பிரீத்தம் சிங் அரோரா 'வீர தீர சூரன்' படத்தை 4 வாரங்கள் ரிலீஸ் செய்ய தடை விதித்தது.
Breaking : வீர தீர சூரன் பட ரிலீசுக்கு 4 வாரம் தடை - ஐகோர்ட் அதிரடி உத்தரவு
இன்று படம் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து சிக்கல்
இதனால் படக்குழுவினர் மட்டும் இன்றி, ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். இன்று படம் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும் நிலையில், இது தொடர்பாக தயாரிப்பு நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், ஐ.வி.ஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், எச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து பேசி சுமூக தீர்வு காண திட்டமிட்டுள்ளதாம். மேலும் நீதிபதியிடம் இது தொடர்பாக முறையிடவும், திட்டமிடப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு வீர தீர சூரன் ரிலீஸ் ஆக வாய்ப்பு
இன்று மாலை 3 மணிக்குள் இரு தரப்பு மத்தியிலும் சமரசம் ஏற்படும் நிலையில், 5 மணிக்குள் அனைத்து பிரச்னைகளும் பேசி முடிக்கப்பட்டு, இன்று மாலை 6 மணிக்கு படத்தின் முதல் காட்சி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே இன்று படம் ரிலீஸ் ஆகுமா? அல்லது நாளை ரிலீஸ் ஆகுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக மாறி இருக்கிறது.
வீர தீர சூரன் பட ரிலீசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வைத்த செக்