
vivek : இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை என சமூக சீர்கேடுகளை பகிரங்கமாக நகைச்சுவை ததும்ப சொன்னதன் காரணமே விவேக் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அழைக்கப்பட்டார். பின்னாளில் அப்துல்கலாமின் பால் ஈர்க்கப்பட்ட விவேக் அவரின் லட்சியங்களைசிகை தாங்கி செய்து வந்தார். கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.
Nedumudi Venu : தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்ல போறோம், சர்வம் தாளமயம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் 73 வயதான பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு. 3 தேசிய விருதுகள் மற்றும் 6 மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ள இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டார். பின்னர் அக்டோபர் 10 -ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
Actress Jeyanthi : நடிகை ஜெயந்தி, தென்னிந்திய மொழிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தேசிய விருதையும் பெற்றுள்ளார் . 1960 மற்றும் 70 களில் வெள்ளித்திரையில் மிகவும் பிஸியான நாயகியாக வலம் வந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகை ஜெயந்தி, கடந்த சில வருடங்களாகவே ஆஸ்துமா பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், ஜூலை 26 காலை உயிரிழந்தார்.
RNR Manohar : திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் நடிகர் மனோகர் தமிழ் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராகவும் பணியாற்றுகிறார். இவர் 1994-ம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகியுள்ளார். பின்பு 1995-ம் ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 61 வயதான இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் நவம்பர் 17 காலை 8.30 மணியளவில் மனோகரன் உயிர் பிரிந்துள்ளது.
actor pandu : ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம திரையுலகில் அறிமுகமான பாண்டு‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சூழலில் மே 6 அதிகாலை சிகிச்சை பலனின்று பாண்டு (74) காலமானார்.
Venkat Suba : வெங்கட் சுபா சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாப்புலரானவர். அவர் சொந்தமாக youtube சேனல் தொடங்கி அதில் சினிமா விமர்சனங்கள், பிரபலங்களின் பேட்டிகள் என எடுத்து வெளியிட்டு வந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 29-ம் தேதி காலை 12.48 மணிக்கு காலமானர்.
SP Jananathan : தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.பி.ஜனநாதன். கடைசியாக இவர் விஜய்சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் லாபம் படத்தை இயக்கி இருந்தார். படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 'லாபம்' படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 11ம் தேதி எடிட்டிங் பணியில் இருந்து ஜனநாதன் வீட்டிற்கு போய் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறியுள்ளார். வெகு நேரமாக அவர் எடிட்டிங் பணி நடக்கும் இடத்திற்கு வராததால் அவருடைய உதவியாளர் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். பின்னர் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இயக்குனர் மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக மார்ச் 14-ம் தேதி உயிரிழந்தார்.
KV Anand : தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் கே.வி.ஆனந்த் பணியாற்றி உள்ளார். 1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படமான ‘தென்மாவின் கொம்பத்து’ என்ற மலையாள படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றவர். 1999ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ததற்காக பாராட்டப்பட்டவர். செல்லமே, விரும்புகிறேன், முதல்வன், நேருக்கு நேர், காதல் தேசம் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் அயன், கோ, கவன், காப்பான், மாற்றான், அநேகன் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
தன்னுடைய அடுத்த படத்தை இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏப்ரல் 30 அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
director thamira : தமிழில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'ரெட்டி சுழி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தாமிரா. இதை தொடர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு, சமுத்திர கனி - ரம்யா பாண்டியன் நடித்த 'ஆண் தேவதை' படத்தை இயக்கி இருந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அசோக் நகரில் உள்ள, மாயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த தாமிராவிற்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட, உயிர் காக்கும் கருவிகளுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 27 காலை தாமிரா(53)
Joker Thulasi : தமிழ் சினிமாவில் மருதுபாண்டி என்ற படத்தின் மூலமாக 1990இல் திரையுலகில் அறிமுகமானவர் ஜோக்கர் துளசி. அதன் பின்னர் உடன்பிறப்பு, தமிழச்சி, அவதாரபுருஷன் ஆகிய படங்களில் தன்னுடைய நடிப்பால் தனி கவனம் ஈர்த்தவர். சின்னத்திரையில் கோலங்கள், வாணி ராணி, கேளடி கண்மணி உள்ளிட்ட சன் டிவி சீரியல்களில் நடித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜோக்கர் துளசி (71) மே 10 அன்று உயிரிழந்தார்.
Actress Chithra : கே.பாலசந்தரால் ’அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ‘ராஜபார்வை’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர், மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ’ஆட்ட கலசம்’ படம் மூலம் ஹீரோயின் ஆனார். பிறகு ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், நல்லெண்ணெய் விளம்பரம் மூலம் மேலும் பிரபலமானார்.
பிறகு திருமணமாகி செட்டிலான அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சித்ராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆகஸ்ட் 21 அன்று வீட்டிலேயே அவர் உயிர் பிரிந்தது.
Actor srikanth : வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். இந்த படத்தின் 4 புதிய முகங்களை இயக்குனர் சி.வி.ஸ்ரீதர், அதில் ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் வெண்ணிரடை மூர்த்தி ஆகியோர். தமிழ் படங்களில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகனாக நடித்த முதல் ஆண் நடிகர் இவர்தான் என்பதும் குறிப்பிடித்தக்கது.
இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'குடியரசு'. இதன் பின்னர் உடல்நல பிரச்சனைகள் மற்றும் வயது மூப்பு காரணமாக திரையுலகை விட்டு விலகினார். சுமார் 44 ஆண்டும் இடைவிடாமல் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் அக்டோபர் 12 அன்று காலமானார்.
Actor Maran : துணை நடிகர் மாறன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த ஜூன் 4 காலமாகியுள்ளார். அவருக்கு வயது 48. 2004ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'கில்லி' படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யின் நண்பராக இவரது கதாப்பாத்திரம் மிகவும் புகழ்பெற்றது.
Nitish Veera : புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, கபாலி, காலா, அசுரன் மற்றும் கடைசியாக விஜய் சேதுபதியுடன் லாபம் போன்ற திரைப்படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்த நிதிஷ் வீரா மே 17 அன்று கொரோனா தொற்றால் காலமானார்.