Valimai BGM : பாட்டு யுவனோடது தான்... ஆனா பிஜிஎம்? - வலிமையில் திடீர் டுவிஸ்ட்.... ஷாக்கான ரசிகர்கள்

Ganesh A   | Asianet News
Published : Jan 02, 2022, 12:38 PM ISTUpdated : Jan 02, 2022, 12:40 PM IST

வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு இசையமைப்பாளர் பணியாற்றியுள்ள தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

PREV
18
Valimai BGM : பாட்டு யுவனோடது தான்... ஆனா பிஜிஎம்? - வலிமையில் திடீர் டுவிஸ்ட்.... ஷாக்கான ரசிகர்கள்

அஜித் நடிப்பில் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது வலிமை. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கி உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், இப்படத்தை தயாரித்து உள்ளார்.

28

2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற 2022-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.

38

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அஜித்தின் தாயாக ஜெயசுதா நடித்துள்ளார்.

48

நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளனர். அஜித் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

58

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு இசையமைப்பாளர் பணியாற்றியுள்ள தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

68

அதன்படி இப்படத்தின் பாடல்களுக்கு மட்டும் தான் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளாராம். மற்றபடி படத்தின் பிஜிஎம் எனப்படும் பின்னணி இசை முழுவதும் ஜிப்ரான் தான் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

78

இப்படத்தில் யுவனுக்கு பதில் ஜிப்ரானை பின்னணி இசை அமைக்க வைத்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. விரைவில் இதுகுறித்து படக்குழு விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

88

இசையமைப்பாளர் ஜிப்ரான் ஏற்கனவே எச்.வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைத்திருந்தார். தற்போது வலிமை மூலம் 2-வது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories