Kajal Aggarwal: கர்ப்பமாக இருக்கும் காஜல்... பொழியும் வாழ்த்து மழை! சூப்பர் தகவலை வெளியிட்டது யார் தெரியுமா?

Published : Jan 02, 2022, 12:14 PM IST

பிரபல நடிகை காஜல் அகர்வால் (Kajal aggarwal Pregnant) கர்ப்பமாக உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே ஒரு தகவல், சமூக வலைத்தளத்தில் தீ யாக சுற்றிவந்த நிலையில் இதனை உறுதி செய்துள்ளார் காஜல் அகர்வாலின் கணவர் கிட்சிலு.  

PREV
18
Kajal Aggarwal: கர்ப்பமாக இருக்கும் காஜல்... பொழியும் வாழ்த்து மழை! சூப்பர் தகவலை வெளியிட்டது யார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.

 

28

சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

 

38

திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்.

 

48

மேலும்... குறையாத காதலுடன் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
 

58

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் காஜல் உரையாடியபோது கூட, திருமணத்திற்கு பிறகும் நான் நடிப்பதற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தன்னுடைய கணவர் கேட்டுக்கொண்டால் நடிப்பில் இருந்து விலகி விடுவேன் என கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

 

68

இதை தொடர்ந்து, தற்போது காஜல் அகர்வால் சில படங்களில் நடித்து வந்தாலும்... பல படங்களின் வாய்ப்புகளை தவிர்த்து வந்ததால், காஜல் கர்ப்பமாக உள்ளதாக கூறப்பட்டது. நடிகை காஜல் இந்தியன் 2 படத்திலும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

78

ஆனால் காஜல் கர்ப்பம் குறித்து இதுவரை அவரது நெருங்கிய வட்டாரத்தை சேர்த்தவர்கள் எந்த ஒரு தகவலும் வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது காஜல் கர்ப்பமாக இருக்கும் தகவலை அவரது கணவர் கிட்சிலு இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.

 

88

இதை தொடர்ந்து, ரசிகர்கள் பலர் காஜலுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நியூ இயர் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பை நேற்று காஜலின் கணவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Read more Photos on
click me!

Recommended Stories