நான் மட்டும் ரஜினிய வச்சு படம் எடுத்தா.... ஆயிரம் கோடி வசூல் கன்பார்ம் - அடிச்சு சொல்லும் மலையாள இயக்குனர்

Ganesh A   | Asianet News
Published : Jan 02, 2022, 10:55 AM IST

ரஜினி (Rajini) படம் தொடர்பாக 6 வருடங்களாக தன்னை துரத்தி வரும் வதந்தி குறித்து பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் (Alphonse Puthren) விளக்கம் அளித்துள்ளார்.

PREV
17
நான் மட்டும் ரஜினிய வச்சு படம் எடுத்தா.... ஆயிரம் கோடி வசூல் கன்பார்ம் - அடிச்சு சொல்லும் மலையாள இயக்குனர்

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபஸ்டியன் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம், மலையாளத்தில் மட்டுமே வெளியான போதும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. 

27

இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சாய் பல்லவி, தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

37

பிரேமம் படத்திற்கு பிறகு கடந்த 6 ஆண்டுகளாக எவ்வித புதுப்பட அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்த அல்போன்ஸ் புத்திரன், அண்மையில் கோல்டு என்கிற மலையாள படத்தை இயக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் பிரித்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

47

இந்நிலையில், 6 வருடங்களாக தன்னை துரத்தி வரும் வதந்தி குறித்து அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “2015-ம் ஆண்டு பிரேமம் ரிலீசான பிறகு, நான் ரஜினி சாருடன் பணியாற்ற விரும்பினேன். 99 சதவீத இயக்குனர்கள் அதைத்தான் விரும்புவார்கள். ஆனால் ஒரு நாள், ரஜினியுடன் பணியாற்ற விரும்பவில்லை என நான் கூறியதாக இணையத்தில் ஒரு செய்தி வெளியாகி வைரலானது. 

57

அதைப்பார்த்த ரஜினியின் மகள் சவுந்தர்யா, என்னிடம் தொடர்பு கொண்டு அதுகுறித்து கேட்டார். நான் அது போலியான செய்தி என விளக்கம் அளித்தேன். அதைப் புரிந்துகொண்ட அவர், நடந்ததை ரஜினியிடம் எடுத்துக்கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

67

ஆனா, சமீபத்தில் நான் கோல்டு படத்துக்காக ஒரு நடிகரிடம் கதை சொல்ல போனப்போ, அவர் ரஜினி படத்தை நீங்கள் இயக்க மறுத்தது உண்மையா என கேட்டார். எனக்கு ஷாக்காக இருந்தது. 2015 இல் இருந்து இந்த வதந்தி என்னை துரத்தி வருகிறது. நான் விரும்பும்படி ஒருநாள் ரஜினி படத்தை நான் இயக்கினார். அந்த படம் நிச்சயம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலிக்கும்.

77

அது நடந்தால் அரசுக்கும் வரி மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அப்படி நடக்காமல் போனா, அது எனக்கும், ரஜினிகாந்துக்கும், ரசிகர்களுக்கும், அரசுக்கும்தான் இழப்பு. அந்த போலி செய்தியை எழுதியவன் ஒருநாள் என் முன்னாடி வருவான். நீங்கள் அந்த நாளுக்காக காத்திருங்க” என குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories