புத்தாண்டை முன்னிட்டு, நடிகை நயன்தாரா (Nayanthara) மற்றும் விக்னேஷ் சிவன் (vignesh shivan) இருவரும் வெளிநாட்டில் இந்த ஆண்டை ரொமான்டிக்காக வரவேற்ற நிலையில், அவர்களை ஓரம் கட்டும் விதமாக குஷ்பு (Kushboo) - சுந்தர் சி (Sunder c) இந்த ஆண்டை வரவேற்றுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.
நடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து, ஸ்லிம் லுக்கிற்கு மாறியதில் இருந்து... விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
26
அந்த வகையில், தற்போது... இந்த வருட புத்தாண்டை தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் கணவருடன் மிகவும் ஹாப்பியாக கொண்டாடிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
36
கருப்பு நிற சல்வாரில், குடும்பத்தினர் அனைவருடனும்... இந்த புத்தாண்டை குஷ்பு வரவேற்றுள்ளார். இதில் பிரபல நடிகர் ஜெயம் ரவியின் மனைவியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
46
இதை தொடர்ந்து, கணவருடன் மிகவும் ரொமான்டிக்காக இந்த புத்தாண்டை வரவேற்றுள்ளார். கணவரின் முகத்தை பார்த்தபடி, ரொமான்ஸ் செய்யும் புத்தாண்டு ஸ்பெஷல் புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
56
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பலர், கோலிவுட் திரையுலகின் யங் ஜோடிகளான நயன் - விக்கியை குஷ்பு - சுந்தர் சி ஜோடி பீட் செய்து விட்டதாக கூறி வருகிறார்கள்.
66
இந்த புகைப்படத்தில் ரசிகர்கள் பொறாமை படும் அளவிற்கு அழகில் மட்டும் அல்ல... இருவருமே மிகவும் யங் லுக்கில் ஜொலிக்கிறார்கள்.