Kangana Ranaut : இந்த வருஷம் எனக்கு நிறையா லவ் லெட்டர் வரனும் கடவுளே.... திருப்பதி கோவிலில் கங்கனா பிரார்த்தனை

Ganesh A   | Asianet News
Published : Jan 02, 2022, 11:45 AM IST

புத்தாண்டன்று திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த கங்கனா, அங்கு செய்த பிரார்த்தனை குறித்தும் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
18
Kangana Ranaut : இந்த வருஷம் எனக்கு நிறையா லவ் லெட்டர் வரனும் கடவுளே.... திருப்பதி கோவிலில் கங்கனா பிரார்த்தனை

தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான தாம் தூம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கங்கனா ரனாவத். இதையடுத்து தமிழில் சரிவர படவாய்ப்புகள் கிடைக்காததால் பாலிவுட்டிற்கு சென்றார்.

28

அங்கு தொட்டதெல்லாம் தங்கம் போல், இவர் நடிக்கும் படமெல்லாம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இதனால் அங்கு ராசியான ஹீரோயினாக வலம் வந்தார் கங்கனா.

38

இவர் 4 முறை தேசிய விருதும் வென்றுள்ளார். நடிப்பதோடு மட்டுமில்லாமல், கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான மணிகர்னிகா படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.

48

தாம் தூம் படத்துக்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த கங்கனா, கடந்தாண்டு வெளியான தலைவி படம் மூலம் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

58

இப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக கங்கனா நடித்து அசத்தி இருந்தார். இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் கங்கனாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.

68

இவ்வாறு நடிப்பில் பிசியாக இருக்கும் கங்கனா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், புத்தாண்டன்று திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த கங்கனா, அங்கு செய்த பிரார்த்தனை குறித்தும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

78

அதன்படி “உலகில் ஒரே ஒரு ராகு-கேது கோவில் தான் உள்ளது. அது திருப்பதிக்கு மிக அருகில் உள்ளது. அங்கு சென்று நான் வழிபட்டேன். ஐந்து லிங்கங்களில் வாயு லிங்கமும் இங்கு நிறுவப்பட்டு உள்ளது. அது மிகவும் அழகான இடம். 

88

எனது அன்பான எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு வேண்டி நான் இங்கு சென்றிருந்தேன். நான் வேண்டிக்கொண்டதெல்லாம், இந்த ஆண்டு எனக்கு குறைவான போலீஸ் புகார்கள், குறைவான FIR-கள் மற்றும் அதிக லவ் லெட்டர்கள் வர வேண்டும். ஜெய் ராகு கேது ஜி” என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories