விஷாலை வெயிட்டிங் லிஸ்டில் போட்ட கெளதம் மேனன்! அவரின் அடுத்த பட ஹீரோ இவரா?

First Published | Jan 19, 2025, 3:01 PM IST

கெளதம் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் விஷால் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதில் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

Gautham Menon

காதல் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் கெளதம் மேனன். இவர் இயக்கிய மின்னலே, வாரணம் ஆயிரம், காக்க காக்க, விண்ணைத் தாண்டி வருவாயா ஆகிய படங்களே அதற்கு சாட்சி. இந்த படங்களெல்லாம் காலம் கடந்து கொண்டாடப்படும் காதல் காவியமாக உள்ளது. இப்படி பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்த கெளதம் மேனன் ஒரு கட்டத்தில் பட தயாரிப்பில் ஈடுபட்டு கடும் நஷ்டத்தை சந்தித்தார். அதோடு அவர் இயக்கிய படங்களும் படுதோல்வி அடைந்தன.

Director Gautham Menon

இதனால் இயக்கத்தை கைவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார் கெளதம் மேனன். இவர் நடிக்காத படம் இல்லை என சொல்லும் அளவுக்கு எந்த ரோல் கொடுத்தாலும் நடிப்பேன் என ஏராளமான படங்களில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் படம் இயக்குவதில் பிசியாகி உள்ள கெளதம் மேனேன், டோமினிக் என்கிற மலையாள படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி நாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... 12 ஆண்டுகளுக்கு முன் விஜய் கைவிட்ட படம்; தூசிதட்டி எடுக்கும் விஷால்!

Tap to resize

vishal, Gautham Menon

இதனிடையே கெளதம் மேனனின் டைரக்‌ஷனில் அடுத்து யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், சமீபத்தில் மதகஜராஜா படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய நடிகர் விஷால், தான் அடுத்ததாக கெளதம் மேனன் டைரக்‌ஷனில் நடிப்பதாக கூறி இருந்தார். இதை அறிந்த ரசிகர்கள் இது வித்தியாசமான காம்போவா இருக்கே என கூறி வந்தனர். அதுவும் நடிகர் விஜய் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட யோஹன் படத்தை தான் விஷாலை வைத்து கெளதம் மேனன் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

Ravi Mohan

ஆனால், தற்போது திடீர் ட்விஸ்டாக கெளதம் மேனன் தன்னுடைய அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க ரவி மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன்படி தான் அடுத்ததாக வெற்றிமாறன் எழுதிய கதையை டைரக்ட் செய்ய உள்ளதாகவும், அதில் ஹீரோவாக நடிக்க ரவி மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் விஷால் படத்தை கெளதம் மேனன் வெயிட்டிங் லிஸ்டில் போட்டுவிட்டாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்... ரியல் எஸ்டேட்டில் அதிகம் முதலீடு செய்த டாப் 5 தமிழ் நடிகர்கள் லிஸ்ட் இதோ

Latest Videos

click me!