
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான பலர், வளர்ந்து ஹீரோ, ஹீரோயினாக நடித்தால் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. அதையும் மீறி சாதித்தவர்கள் என்றால் அது கமல்ஹாசன், சிம்பு உள்பட வெகு சிலரே. அப்படி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பேமஸ் ஆன ஒரு நடிகை, பின்னாளில் ஹீரோயினாக அறிமுகமான பின்னரும் அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். ஆனால் அந்த நடிகை ஐந்து படங்களிலேயே சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டார். அவரின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த நடிகை வேறு யாருமில்லை நடிகை ஷாலினி தான். இவர் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான Ente Mamattikkuttiyammakku என்கிற மலையாள படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு வெறும் நான்கு வயது தான். சின்ன வயசிலேயே தன்னுடைய நடிப்பால் கவனம் ஈர்த்த ஷாலினிக்கு மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக அப்போதைய டாப் ஹீரோக்களான சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன் ஆகியோரின் படங்களில் பேபி ஷாலினியாக நடித்து கலக்கினார்.
வருஷம் 16 படத்துக்கு பின்னர் குழந்தை நட்சத்திரமாக நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஷாலினி, சுமார் 7 ஆண்டுகள் சினிமாவுக்கு முழுக்கு போட்டு படிப்பில் கவனம் செலுத்தினார். இதையடுத்து பள்ளிப் படிப்பை முடித்ததும் 18 வயது ஷாலினிக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் மலையாள நடிகர் பகத் பாசிலின் தந்தை பாசில் இயக்கிய ‘அந்நியாதி பிராவு’ என்கிற மலையாள படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையும் படியுங்கள்... கண்டுகொள்ளாத விஜய்; அஜித் மனைவி செய்த உதவி? திடீர் என நடந்த ஷாலினி - சங்கீதா சந்திப்பின் பின்னணி என்ன?
அப்படம் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க அதையே தமிழில் ‘காதலுக்கு மரியாதை’ என்கிற பெயரில் ரீமேக் செய்தார் பாசில். இப்படத்தின் மூலம் தமிழிலும் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் ஷாலினி. இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் ஷாலினி. இப்படம் தமிழிலும் வேறலெவல் ஹிட்டானதால் கோலிவுட்டில் ஷாலினிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் தனக்கு பிடித்தமான கதையில் மட்டுமே நடிப்பேன் என்கிற முடிவில் தீர்க்கமாக இருந்தார் ஷாலினி.
அதுமட்டுமின்றி துளியும் கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன் என கண்டிஷன் போட்டு நடித்த ஷாலினிக்கு அடுத்ததாக விஜய்யுடன் கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் அமர்க்களம் ஆகிய படங்களில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. இதில் அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜித் மீது காதல் வயப்பட்ட ஷாலினி, அவரை கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.
அஜித்தை திருமணம் செய்த பின்னர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே, பிரசாந்தின் பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் மட்டும் நடித்த ஷாலினி, சினிமாவை விட்டு விலகினார். அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு 24 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கவில்லை. இருப்பினும் ஷாலினிக்கான மவுசு இன்னும் கோலிவுட்டில் குறைந்தபாடில்லை. உச்ச நடிகையாக இருந்தபோதே சினிமாவை விட்டு விலகிய ஷாலினியின் சொத்து மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அவரின் குழந்தை பருவ புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... அலைபாயும் அன்போடு; 24 வருடத்துக்கு பின் தன் சினேகிதனை சந்தித்த ஷாலினி அஜித்!!