விபத்தில் செயலிழந்த கால்; சினிமா கைவிட்டாலும் 3300 கோடிக்கு பிசினஸ் நடத்தும் பிரபல ஹீரோ!

First Published | Jan 19, 2025, 12:43 PM IST

தமிழில் உச்ச நடிகராக வலம் வந்த ஒருவர் சினிமாவில் அறிமுகமான 10 ஆண்டுகளில் விபத்தால் கால் செயலிழந்து சினிமாவை விட்டே விலகினார். அவரைப் பற்றி பார்க்கலாம்.

Tamil Actor Who Owned 3300 crore worth company

சினிமாவில் வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதில் கிடைக்காது. அப்படி ஈஸியாக வாய்ப்பு கிடைத்தாலும் அதை தக்க வைத்துக் கொள்வது கடினம். அப்படி சினிமாவில் மணிரத்னம் படம் மூலம் அறிமுகமான நடிகர் ஒருவர், தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்திக் கொண்டு, தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தார். ஆனால் அந்த நடிகரின் வாழ்க்கை ஒரு விபத்தால் தலைகீழாக மாறியது. அந்த விபத்தால் அவர் கால் செயலிழந்து படுத்த படுக்கை ஆனார். பின்னர் பீனிக்ஸ் பறவை போல் அதில் இருந்து மீண்டு வந்து தற்போது நடிப்பதோடு, 3300 கோடி மதிப்புள்ள பிசினஸை நடத்தி வருகிறார்.

Arvind Swamy

அந்த நடிகர் வேறுயாருமில்லை... அரவிந்த் சாமி தான். இவர் கடந்த 1991-ம் ஆண்டு மணிரத்னம் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான தளபதி படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் நடிக்கும் போது அரவிந்த் சாமிக்கு வயது 20 தான். அப்படம் மகாபாரதத்தை தழுவி எடுக்கப்பட்டது. அதில் அர்ஜுனன் கதாபாத்திரம் தான் அரவிந்த் சாமிக்கு வழங்கப்பட்டது. அந்த கதாபாத்திரத்தை திறம்பட நடித்து முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார் அரவிந்த் சாமி.

இதையும் படியுங்கள்... விஜய் பிடிக்கும்... அதற்காக அவருக்கு ஓட்டு போட முடியாது - ரீல் ‘MGR’ அரவிந்த் சாமி கொடுத்த வியத்தகு விளக்கம்

Tap to resize

Roja Movie Hero Arvind Swamy

தளபதி படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பால் இம்பிரஸ் ஆன மணிரத்னம், அடுத்த படமே அவரை ஹீரோவாக வைத்து இயக்கினார். அப்படம் தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் படமாக மாறியது. அதுதான் ரோஜா. அப்படத்தின் மூலம் அரவிந்த் சாமிக்கு சாக்லேட் பாய் அந்தஸ்தும் கிடைத்தது. இதையடுத்து மீண்டும் மணிரத்னம் இயக்கிய பாம்பே படத்தில் நடித்தார் அரவிந்த் சாமி, இந்த படமும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி அவரை நம்பிக்கை நட்சத்திரமாக உயர்த்தியது.

Arvind Swamy Comeback

இப்படி தொடர் வெற்றிப் படங்களில் நடித்து வந்த அரவிந்த் சாமி கடந்த 2005-ம் ஆண்டு விபத்தில் சிக்கினார். அதில் அவரது கால் செயலிழந்தது. இதனால் 2 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த அரவிந்த் சாமி, அதில் இருந்து படிப்படியாக மீண்டும் வந்தார். ஆனால் சினிமாவில் மார்க்கெட் இழந்ததால், பிசினஸில் கவனம் செலுத்த தொடங்கிய அவர், டேலண்ட் மேக்ஸிமஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கி அதில் கவனம் செலுத்தி வந்தார். அந்த நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ.3300 கோடி ஆகும்.

Arvind Swamy Business

விபத்தின் இருந்து மீண்டு வந்த அரவிந்த்சாமி, மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தாலும், அவருக்கு மறுவாழ்வு கொடுத்த படம் என்றால் அது மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் தான். அப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த அரவிந்த் சாமி, அப்படத்துக்கு பின் மீண்டும் பார்முக்கு வந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அவர் நடிப்பில் வெளிவந்த மெய்யழகன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன் திறமையை நிரூபித்து உள்ளார். இவர் நவரசா என்கிற வெப் தொடரில் விஜய் சேதுபதி நடித்த கதையை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ரூ.3300 கோடி பிசினஸ்... தனி ஒருவனாக கட்டி காப்பாற்றும் அரவிந்த் சாமியின் வியக்க வைக்கும் NET WORTH இதோ

Latest Videos

click me!