பாடலாசிரியராக அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி; பிக் பாஸ் டைட்டில் வின்னர் தான் ஹீரோ!

First Published | Jan 19, 2025, 2:35 PM IST

Vijay Sethupathi Become a Lyricist in Bun Butter Jam Movie : பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி பாடல் ஒன்று எழுதியதன் மூலமாக பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ளார்.

Vijay Sethupathi Become a Lyricist in Bun Butter Jam Movie

Vijay Sethupathi Become a Lyricist in Bun Butter Jam Movie : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இறுதிப் போட்டிக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டிக்கு வந்த 5 போட்டியாளர்களில் முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றுள்ளார் என்றும், 2ஆவது இடத்தில் சவுந்தர்யாவும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.

Raju Lead Role in Bun Butter Jam

இந்த நிலையில் தான் விஜய் சேதுபதி பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மாஸ் ஹீரோக்களில் ஒருவராக அவதாரம் எடுத்தவர் தான் விஜய் சேதுபதி. 50க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வந்த மகாராஜா படம் இந்தியாவையும் தாண்டி உலகளவில் சாதனை படைத்தது.

Tap to resize

Vijay Sethupathi Become Lyricist in Bun Butter Jam

ஒரு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளரையும் தாண்டி விஜய் சேதுபதி இப்போது பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ராஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் பன் பட்டர் ஜாம். இந்தப் படத்தின் மூலமாக ராஜூ ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் இடம் பெற்ற ஏதோ பேசத்தானே என்றா பாடலை விஜய் சேதுபதி எழுதியுள்ளார். இதன் மூலமாக அவர் இப்போது பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ளார். விஜய் சேதுபதி எழுதிய இந்தப் பாடலை நடிகர் சித்தார்த் மற்றும் ஷில்ஃபா ராவ் இருவரும் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!