நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் முக்கியமானது கஜினி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சஞ்சய் ராமசாமியாகவும், கஜினியாகவும் இருவேறு பரிணாமங்களில் மிரட்டி இருந்தார் சூர்யா. ஆனால் இப்படத்தின் கதை சூர்யாவுக்கு எழுதப்பட்டது இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?... அது தான் நிஜம். இப்படத்தின் கதையை வேறு ஒரு ஹீரோ ரிஜெக்ட் பண்ணியதை அடுத்து தான் சூர்யா நடித்துள்ளார். கஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய அந்த ஹீரோ யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
கஜினி படத்தை மிஸ் பண்ணிய ஹீரோ யார்?
அந்த ஹீரோ வேறுயாருமில்லை... நடிகர் அஜித் தான் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். நான் கடவுள் படத்திற்காக அஜித் தலைமுடி வளர்த்ததால், கஜினிக்காக மொட்டை அடிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கஜினி படம் குறித்து முருகதாஸ் பேசினார். அஜித்தை வைத்து மிரட்டல் என்கிற தலைப்பில் உருவாக இருந்த படம் தான் பின்னாளில் கஜினி ஆக உருவானது என ஏ.ஆர்.முருகதாஸ் கூறி இருக்கிறார்.
34
அஜித் நடிக்க மறுத்தது ஏன்?
மேலும் அவர் கூறியதாவது : "கஜினி படத்தில் முதலில் அஜித் தான் நடிக்க இருந்தார். ஆனால், அப்போது அவர் வேறு படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஆர்யா நடித்த நான் கடவுள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான். அந்தப் படத்திற்காக அவர் தலைமுடி வளர்த்ததால், கஜினிக்காக மொட்டை அடிக்க முடியவில்லை. இதுதான் முக்கிய காரணம். சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தில் அவர் இரண்டு நாட்கள் நடித்த காட்சிகள் இன்னும் என்னிடம் உள்ளன." என்று முருகதாஸ் கூறினார். 2005 ஆம் ஆண்டு வெளியான கஜினி, மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர், இந்தி மொழியில் ஆமிர் கானை வைத்து முருகதாஸ் இயக்கினார். அங்கும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி திரைப்படத்தில் பிஜு மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வித்யூத் ஜம்வால், விக்ராந்த், ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு சுதீப் இளமன், இசை அனிருத். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் 2024ல் சூப்பர் ஹிட் ஆனது. உலகம் முழுவதும் 334 கோடி வசூலித்தது. மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார். சாய் பல்லவி, பூவன், ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் பிரசாத், ஷியாம் மோகன், கீது கைலாஷ், விகாஸ் பங்கர், மிர் சல்மான் உள்ளிட்டோர் நடித்தனர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்தது.