துணிவு மட்டுமில்ல வாரிசு படத்தையும் உதயநிதி தான் வெளியிட போகிறாராம்... இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு..!

First Published | Oct 30, 2022, 8:45 AM IST

அஜித்தின் துணிவு படத்தை வெளியிட உள்ள உதயநிதி ஸ்டாலின், விஜய்யின் வாரிசு படத்தின் ரிலீசுக்கு பின்னணியில் இருந்து உதவ இருக்கிறாராம்.

தீபாவளி பண்டிகைக்கு தமிழில் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீசாகாவிட்டாலும், பொங்கல் ரேஸ் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஏனெனில் அடுத்த வருட பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசாக உள்ளன. இதில் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு தற்போதே எழத் தொடங்கி உள்ளது.

அதுமட்டுமின்றி துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிடப் போகிறது என்கிற அறிவிப்பும் அண்மையில் வெளியானது. இதனால் வாரிசு படத்துக்கு அதிக தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது. இதனால் வாரிசு படக்குழு ரிலீஸ் தேதியை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

இதையும் படியுங்கள்... chandra lakshman : 40 வயதில் தாயான சீரியல் நடிகை..குவியும் வாழ்த்துக்கள்

Tap to resize

ஆனால் உண்மையில் வாரிசு படக்குழுவுக்கு ரிலீஸ் தேதியை மாற்றும் முடிவு துளிகூட இல்லையாம். அதுமட்டுமின்றி இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தான் வாங்கி உள்ளார் என்பதை கடந்த வாரமே சொல்லி இருந்தோம். ஆனால் அதில் தற்போது ஒரு டுவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.

அது என்னவென்றால் வாரிசு படத்தை லலித் குமார் தான் வெளியிடப்போகிறார், அதுவும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் அவர் வெளியிட உள்ளாராம். அதாவது சமீபத்தில் தீபாவளிக்கு ரிலீசான பிரின்ஸ் - சர்தார் படங்களைப் போன்று தான் வாரிசு - துணிவு பட ரிலீசும் இருக்கப்போகிறது. சர்தார் படத்தை நேரடியாக உதயநிதி வெளியிட்டார், அதேபோல் பிரின்ஸ் படத்தின் ரிலீசுக்கும் பின்னணியில் இருந்து உதவி இருந்தார். இதனால் இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் தியேட்டர்கள் கிடைத்தன.

அதேபோல தான் விஜய்யின் வாரிசு படத்தின் ரிலீசுக்கு பின்னணியில் இருந்து உதவ இருக்கிறாராம் உதயநிதி. இதனால் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களுக்கு சமமான அளவில் தியேட்டர்கள் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. 

இதையும் படியுங்கள்... அரியவகை நோய் பாதிப்பால் இளம் இசையமைப்பாளர் மரணம்... மாதம் 10 லட்சம் செலவழித்தும் காப்பாற்ற முடியாம போன சோகம்

Latest Videos

click me!